அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வருகையின்போது 36 மணிநேரத்துக்காக ரூ.38 லட்சத்தை மத்திய அரசு செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2020ம் ஆண்டு இந்தியா வருகையின்போது 36 மணிநேரத்துக்காக ரூ.38 லட்சத்தை மத்திய அரசு செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தப் பதிலை அளித்துள்ளது.
அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் முதன்முறையாக இந்தியாவுக்கு தனது மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர் குஷ்னர், மூத்த அதிகாரிகள் ஆகியோருடன் கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 முதல் 25ம் தேதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியிருந்த நேரத்தில் ட்ரம்ப்பின் வருகையும், அவருக்காக குஜராத் மைதானத்தில் லட்சக்கணக்கில் மக்களைத் திரட்டியதும் பெரும் விவாதப்பொருளானது. 36 மணிநேரம் இந்தியாவில் இருந்த ட்ரம்ப், அகமதாபாத், ஆக்ரா, டெல்லி நகரங்களுக்குச் சென்றார்.
மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்
பிப்ரவரி 24ம் தேதிஅகமதாபாத்தில் 3 மணிநேரம் ட்ரம்ப் செலவிட்டார். அங்கு 22 கி.மீ ரோட்ஷோவிலும் பங்கேற்ற ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டிருந்த மொடேரா மைதானததில் நமஸ்தே ட்ரம்ப் கூட்டத்தில் பிரதமர் மோடி, ட்ரம்ப் ஆகியோர் பங்கேற்றனர்.அதன்பின் ஆக்ரா, டெல்லி சென்றுவிட்டு, அங்கிருந்து ட்ரம்ப் புறப்பட்டார்.
ட்ரம்ப் வருகைக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை குறித்தும், அவர்களின் உணவு, பாதுகாப்பு, தங்குமிடம், விமானம், போக்குவரத்து ஆகியவற்று மொத்தமாக செலவிட்ட தொகை குறித்து மிஷால் பத்தேனா என்பவர் தகவல் அறியும் உரிமைச்ச ட்டத்தின் கீழ் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த ஆர்டிஐ மனுவை பத்தேனா தாக்கல் செய்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக அவருக்கு எந்த பதிலையும் மத்திய தகவல் ஆணையம் அளிக்கவில்லை.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்குப்பின் கடந்த 4ம் தேதி, கொரோனாவைக் காரணம் காட்டி மத்திய தகவல் ஆணையம் பதில் அளித்தது.
குற்றவாளிகள் விடுதலையால் நீதித்துறை மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது: பில்கிஸ் பானு வேதனை
இதில் ட்ரம்ப், அவரின் மனைவி, மகள், மருமகன், உயர் அதிகாரிகள் ஆகியோர் 36மணிநேரம் இந்தியாவில் செலவிட்டனர். அவர்களின் உணவு, பயணம், போக்குவரத்து,பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ரூ.38 லட்சம் செலவானது எனத் தெரிவித்துள்ளது.