மக்களிடத்தில் நாட்டின் பாதுகாப்பு பற்றியும், வெளிநாட்டு உறவுகள் பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்பிய 8 யூடியுப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்களிடத்தில் நாட்டின் பாதுகாப்பு பற்றியும், வெளிநாட்டு உறவுகள் பற்றியும், அரசு திட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்பிய 8 யூடியுப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 7 யூடியூப் சேனல்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு யூடியூப் சேனல் அடக்கம். இந்த சேனல்கள், 2021, தகவல் தொழில்நுட்பச்ச ட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.இந்த சேனல்களுக்கு மொத்தம் 114 கோடி வியூவர்ஸ், 85 லட்சத்து 73 வாடிக்கையாளர்கள் உள்ளன.
மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை, அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்து மக்களிடத்தில் தவறான தகவல்களையும், உண்மைக்கு புறம்பான தகவல்களையும் சில யூடியூப் சேனல்கள் தெரிவித்தன. மக்களிடத்தில் வெறுப்புணர்வை பரப்பும் வகையில் வீடியோக்களை சித்தரித்து வெளியிட்டன.
உதாரணமாக இந்திய அரசு மதரீதியான கட்டிடங்களை இடிக்க உத்தரவிட்டுள்ளது, பண்டிகைகளைக் கொண்டாடத் தடைவிதித்துள்ளது.இந்தியாவில் மதப் போர் நடக்கிறது போன்ற வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இந்த வீடியோக்கள் பார்ப்பதால் மக்களிடையே சமூக நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதி பாதிக்கிறது.
தொழிலதிபர் கெளவுதம் அதானிக்கு விஐபி 'Z' பிரிவு பாதுகாப்பு: மத்திய அரசு ஒப்புதல்
அதுமட்டுமல்லாமல் இந்திய ராணுவம், ஜம்மு காஷ்மீர் குறித்த உண்மைக்கு மாறான தகவல்களை யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பியுள்ளன.இவை அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இந்த வீடியோக்கள் நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு, அண்டை நாடுகளுடன் உறவு, நட்புறவுகள் அனைத்தும் சீரழிக்கும் வகையில் உள்ளன.
மேலும், போலியான, உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் போலியான புகைப்படங்களையும், சித்தரிக்கும் படங்களையும் வெளியிட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் தனது அவசரஅதிகாரத்தைப்பயன்படுத்தி, தகவல் தொழில்நுட்ப விதிகள்படி 16-8-2022 அன்று 8 யூடியூப் சேனல்களை முடக்கி நடவடிக்கை எடுத்தது.
இதில் யூடியூப் நியூஸ் சேனல் ஒன்று, பேஸ்புக் கணக்கு, 2 பேஸ்புக் போஸ்ட் ஆகியவை முடக்கப்பட்டன. ஒட்டுமொத்த 8 யூடியூப் சேனல்களின் வியூவர்ஷிப் 114 கோடியாகும், ஏறக்குறைய 85 லட்சம் பயனாளிகள் உள்ளனர். 2021ம் ஆண்டு டிசம்பரிலிருந்து இதுவரை 102 யூடியூப் சேனல்கள், நியூஸ்சேனல்கள், அவற்றின் சமூக ஊடகக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
செய்திசேனல்களுக்கு உண்மையான, நம்பகமான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதிலும், நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் முறியடிக்க அரசு உறுதியாக உள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் பேஸ்புக் கணக்கு எங்கு நிர்வகிக்கப்படுகிறது? அம்பலமான புதிய தகவல்
தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்கள் பட்டியல்
1. லோக்தந்த்ரா டிவி
2. யுஅன்ட்வி டிவி
3. ஏஎம் ராஸ்வி
4. கெளரவ்ஷாலி பவான் மதிலாஞ்சல்
5. சீடாப்5டிஹெச்(seetop5th)
6. சர்க்காரி அப்டேட்
7. சப் குச் தேக்கோ
8. நியூஸ் கி துனியா(பாகிஸ்தான்)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.