ஓலா, உபர் போன்று அரசு சார்பில் புதிய ஆன்லைன் டாக்சி சேவை.. நாட்டிலே முதல்முறையாக கேரளாவில் அறிமுகம்..

By Thanalakshmi VFirst Published Aug 18, 2022, 3:10 PM IST
Highlights

கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. கேரள அரசு , ஒலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. 

கேரள அரசு , ஓலா, உபர் போன்று ”கேரளா சவாரி” எனும் பெயரில் ஆன்லைன் கால் டாக்சி சேவையை தொடங்கியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் டாக்சி சேவைகளை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் குறைந்த விலையில் ஆன்லைன் டாக்சி சேவை செயல்படுத்த கேரள அரசு முடிவு செய்தது. 

தற்போது தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையை போல் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்பட்டுள்ளது. மலையாள மாதத்தின் தொடக்க மாதமான சிங்கம் மாதத்தில் முதல் நாளான நேற்று இச்சேவையை கேரள அரசு தொடங்கி வைத்தது. கேரளா சாவாரி எனும் பெயரில் ஆன்லைன் செயலில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் தங்கள் செல்போன்களில் பதவிறக்கம் செய்து, டாக்சிகளை புக் செய்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: 36 மணிநேரத்துக்கு ரூ.38 லட்சம் செலவு! ட்ரம்ப் வருகைக்கு வாரி இறைத்த மத்திய அரசு: 2 ஆண்டுகளுக்குப்பின் பதில்

இந்நிலையில் நேற்று முதல் அமலுக்கு வந்த, இ-டாக்சி சேவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி, தனியார் டாக்சி சேவை போல் அல்லாமல், ஓட்டுநர்களிடமிருந்து 8% மட்டுமே அரசு சார்பில் கமிஷனாக பெறப்படுகிறது. இதுக்குறித்து பேசிய நில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன்குட்டி, 'நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறையாகும் என்று தெரிவித்தார்.

முழு பாதுப்பான பயணம் கொடுப்பதே கேரளா சாவாரி செயலி உருவாக்கப்பட்டதின் நோக்கமாகும் என்று தெரிவித்தார். மேலும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ-டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும் படிக்க:மத்திய அரசை விட சிறப்பாக செயல்படுகிறோம்: தமிழகம் ஏன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்கணும்: பிடிஆர் விளாசல்

click me!