congress president election: 20 ஆண்டுகளுக்குப்பின்!காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல்: நாளை அறிவிக்கை வெளியீடு

By Pothy RajFirst Published Sep 21, 2022, 1:50 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைமுறைகள் 20 ஆண்டுகளுக்குப்பின் நாளை அறிவிக்கையுடன் தொடங்குகிறது. இதில் சசி தரூர், அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுகிறார்களா, ராகுல் காந்தியும் போட்டியிடுகிறாரா என இனிவரும் நாட்களில் தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைமுறைகள் 20 ஆண்டுகளுக்குப்பின் நாளை அறிவிக்கையுடன் தொடங்குகிறது. இதில் சசி தரூர், அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுகிறார்களா, ராகுல் காந்தியும் போட்டியிடுகிறாரா என இனிவரும் நாட்களில் தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு கடைசியாக 2000ம் ஆண்டில் தேர்தல் நடந்தது. இதில் சோனியா காந்தியை எதி்ர்த்து, ஜிதன் பிரசாதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் தேர்தல் நடைபெறவில்லை. ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட ஒருமித்த கருத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வேட்புமனு?: எம்எல்ஏக்களுடன் திடீர் சந்திப்பு

அதற்கு முன்1997ம் ஆண்டு நடந்த தேர்தலில் சீதாராம் கேசரியை எதிர்த்து சரத் பவார், ராஜேஷ் பைலட் போட்டியிட்டு தோல்வி அடைந்தனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்காக ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிடுவது 20 ஆண்டுகளுக்குப்பின் இதுதான் முதல்முறையாகும்.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர், ராஜஸ்தான் முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட் இருவரும் போட்டியிடுவார்கள் எனத் தெரிகிறது. ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடாவிட்டால்மட்டும்தான் அசோக் கெலாட் களமிறங்குவார் என்பது தகவல்கள் தெரிவிக்கின்றன

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கை நாளை நடக்கிறது. வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதிவரை வேட்புமனுத் தாக்கல் நடக்கிறது. வேட்புமனுத் தாக்கல் பரிசீலனை அக்டோபர் 1ம்தேதியும், வேட்புமனுவை திரும்பப்பெற கடைசித் தேதி அக்டோபர் 8ம்தேதியாகும். வாக்குகள் எண்ணப்பட்டு அக்டோபர் 17ம்தேதி  முடிவு அறிவிக்கப்படும்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை: கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

இந்த தேர்தலில் சசி தரூருக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே போட்டி இருக்குமா அல்லதுசசி தரூர் , ராகுல் காந்தி இடையே போட்டி இருக்குமா என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். நீண்டகாலம் கட்சியை சிறப்பாக வழிநடத்திய சோனியா காந்திக்குப்பின் புதிதாக ஒரு தலைவர் வரஉள்ளார். 

கடந்த 1998ம் ஆண்டிலிருந்து சோனியா காந்தி தலைவராக இருந்து, 2017ம் ஆண்டு அந்த பொறுப்பை ராகுல் காந்தியிடம் ஒப்படைத்தார். ஆனால், 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்குப்பின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் போட்டியிடுவதைத்தான் சோனியா காந்தி விரும்புகிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர், அசோக் கெலாட் போட்டி? ராகுல் இல்லையா?

 கடந்த திங்கள்கிழமை சசி தரூர் சோனியா காந்தியைச் சந்தித்து தேர்தலில்போட்டியிட அனுமதி கோரினார். அப்போது பேசிய சோனியா, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும் தேர்தலாகும் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ராகுல் காந்தியை தலைவராகத் தேர்ந்தெடுக்க 10க்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!