cow lumpy virus: லம்பி வைரஸிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு யாகம்!உ.பி. மருத்துவர் வினோதம்

By Pothy RajFirst Published Sep 21, 2022, 12:08 PM IST
Highlights

கால்நடைகளைத் தாக்கும் லம்பி வைரஸ் நோயை கடவுள் குணப்படுத்துவார் எனக்கூறி உ.பி. பானாராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவர்சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

கால்நடைகளைத் தாக்கும் லம்பி வைரஸ் நோயை கடவுள் குணப்படுத்துவார் எனக்கூறி உ.பியில் வாரணாசியில் உள்ள பானாராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவர்சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.

கால்நடைகளுக்குப் பரவும் லம்பி வைரஸ் தீவிரமாகப் பரவிவருகிறது. இதுவரை 50ஆயிரம் கால்நடைகள் லம்பி வைரஸ் எனும் தோல் நோய்க்கு உயிரிழந்துள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 15 மாவட்டங்களில் இந்த நோய் பரவியுள்ளது.

கார்களில் பின் இருக்கை சீட்பெல்ட் அலாரம் கட்டாயம்: மத்திய அரசு புதிய விதி

இந்நிலையில் வாரணாசியில் உள்ள இந்து பனாராஸ் பல்கலைக்கழகத்தில் மருத்து அறிவியல் பிரிவின் பேராசிரியரும், மருத்துவரான சுனில் குமார், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதோடு, கடவுளிடம் பிரார்த்தனையும் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் சுனில் குமார் நேற்று கூறுகையில் “ கால்நடைகளுக்கு வந்துள்ள லம்பி வைரஸ் நோயை குணப்படுத்த மருந்துகளும், சிகிச்சை முறையும் தேவை. அதேசமயம், கடவுளின் ஆசியின்றி இந்த நோய் குணமாகாது.

ஆதலால், லம்பி வைரஸ் நோயை குணப்படுத்த கடவுளிடம் பிராத்தனை செய்ய வேண்டும்
லம்பி வைரஸ் குறித்து நான் படித்தபோது, இரு விஷங்களை அறிந்து கொண்டேன். நோயை எதிர்த்துப் போராட கால்நடைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும், அதேநேரம், கடவுளின் ஆசியும் தேவை.

செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

அதனால்தான் கால்நடைகளைக் காக்க நான் “மகாமிர்யுன்ஜே யாகம்” வளர்த்து கால்நடைகளைக் காக்க பிரார்த்தனை செய்தேன்” எனத் தெரிவித்தார்

கால்நடைகளுக்கு சிகிச்சையளி்க்க ஒவ்வொரு மாநில அரசும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி மருந்துகளை வாங்கியுள்ளன. ஆனால், மருத்துவர் சுனில் குமார், கால்நடைகள் நலனுக்காகவும், குணமடையவும், யாகம் நடத்தியுள்ளார். இவர் நடத்திய யாகம் 2.50மணிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

பனாராய் இந்து பல்கலைக்கழத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ராஜேஷ் சிங் கூறுகையில் “ கால்நடைகளுக்காக யாகம் நடத்தியது எனக்குத் தெரியாது”எனத் தெரிவித்தார்

அசுர வளர்ச்சியில் அதானி குழுமம்! பங்குச்சந்தையில் டாடா குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி சாதனை

உ.பி.யில் கால்நடைகளுக்கான லம்பி வைரஸ் வேகமாகப் பரவுவதால், கால்நடைச் சந்தை நடத்தக் கூடாது என்றும் கால்நடைகளுக்கான லம்பி வைரஸ் பரவல் குறைந்தபின் கால்நடைச் சந்தை நடத்தாலாம் என முதல்வர் ஆதித்யநாத்உத்தரவிட்டுள்ளார். 

லம்பி வைரஸ் நோயை குணப்படுத்த உ.பி. மாநில கால்நடை பராமரிப்புத் துறை சிறப்பு தடுப்பூசி முகாம்களை மாநிலம்முழுவதும் நடத்தி வருகிறது. 

click me!