muslim: முஸ்லிம் கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக மழித்து கொடுமை: விசாரணை நடத்த மத்தியப் பிரதேச அரசு உத்தரவு

Published : Sep 21, 2022, 08:14 AM IST
muslim: முஸ்லிம் கைதிகளின் தாடியை வலுக்கட்டாயமாக மழித்து கொடுமை: விசாரணை நடத்த மத்தியப் பிரதேச அரசு உத்தரவு

சுருக்கம்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் தாடியை கட்டாயப்படுத்தி மழித்து கொடுமை நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, விசாரணை நடத்த மாநில அ ரசு உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள முஸ்லிம் கைதிகளின் தாடியை கட்டாயப்படுத்தி மழித்து கொடுமை நடந்ததாக எழுந்த புகாரையடுத்து, விசாரணை நடத்த மாநில அ ரசு உத்தரவிட்டுள்ளது.

போபால் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத் இதுதொடர்பாக சிறையின் ஜெயிலர் என்எஸ் ராணா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.ஜிராபூரைச் சேர்ந்த கலீம் கான் என்பவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார். 

அப்போது அவர்  கூறுகையில் “ அரசின் தடை உத்தரவை மீறியதால், நான் உள்பட 3பேர்  கைது செய்யப்பட்டு கடந்த 14ம்தேதி சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளோம். நாங்கள் சிறையில் இருந்தபோது, எங்களின் தாடியை மழிக்க கட்டாயப்படுத்தி மழித்தனர். அதுமட்டும்லலாமல், தாடி வைத்திருப்பதால் எங்களை பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று ஜெயலர் ராணா அவமானப்படுத்தினார். 

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை: கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு

எங்களின் தாடியை மழிக்க கொடுமைப்படுத்தினார். நான் கடந்த 8 ஆண்டுகளாக தாடி வைத்திருக்கிறேன். என் தாடியை மழிக்கக் கோரி என்னையும், சிறை ஊழியர்களையும் கட்டாயப்படுத்திய ஜெயலர் நடவடிக்கை என் மத உணர்வுகளை புண்படுத்தும்வகையில் இருந்தது. ஜெயலர் ராணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் போராட்டமும் நடத்தினார். இந்த விவகாரம் ஊடகங்களில் பெரும் விவாதத்தை எழுப்பியது

ஆனால், ஜெயலர் ராணா கூறுகையில் “ நான் எந்த கைதிகளிடமும் பேசவில்லை. அவர்களிடம் தாடியை மழியுங்கள் எனக் கூறவில்லை. அவர்கள் சிறையிலிருந்து வெளியே சென்றபின் ஏன் தாடியை மழித்தார்கள் என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் சிறையில் அதிகாரிகள் யாரும் கைதிகளை தாடியை மழிக்கக் கோரி கொடுமைப்படுத்தவில்லை” எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் அசோக் கெலாட் வேட்புமனு?: எம்எல்ஏக்களுடன் திடீர் சந்திப்பு

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஒருவர் தாடி வைத்திருந்தால் அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவரா. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அந்த ஜெயலரின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகிறாரா அல்லது  விருது வழங்கப் போகிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

போபால் காங்கிரஸ் எம்எல்ஏ ஆரிப் மசூத் கூறுகையில் “ ஜெயலர் ராணாவுக்கு எதிராக அரசு முதல் தகவல் அறி்க்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகளுக்கு வருகிறது ஆப்பு: தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை

இதையடுத்து, முஸ்லிம் கைதிகளை சிறையில் தாடியை மழித்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உறுதியளித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதக் கூட்டங்களில் பெண் ஜிஹாதிகள்..! இந்தியாவிற்கு எதிராக படுபயங்கர சதித்திட்டம்..! எல்லையில் தீவிர பாதுகாப்பு..!
IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!