pm cares: பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம்: புதிய உறுப்பினர்கள் நியமனம்

By Pothy RajFirst Published Sep 21, 2022, 1:00 PM IST
Highlights

பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் அறங்காவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் முழுமனதுடன் பங்களிப்பு செய்தவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி பிரதமர் மோடி “பிஎம் கேர்ஸ்' என்ற நிதியத்தை அறிவித்தார். பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள், அரசு ஊழியர்கள், நன்கொடைகள் அளித்து வருகிறார்கள். 

இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறைஅமைச்சர் அமித் ஷா, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

லம்பி வைரஸிலிருந்து கால்நடைகளை காக்க சிறப்பு யாகம்!உ.பி. மருத்துவர் வினோதம்

இந்த பிஎம் கேர்ஸ் மூலம் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க வென்டிலேட்டர்கள், மருத்துவக் கருவிகள், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் என ஏராளமான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பிஎம் கேர்ஸ் நிதி மூலம் 4,345 குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. 

ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி சொன்னது கரெக்ட்தான்! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டு

இந்த பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று(20ம்தேதி) நடந்தது. இந்தக் கூட்டத்தில் உள்துறைஅமைச்சர் அமித் ஷா, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தவிர்த்து புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முன்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில்  பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு நிதியுதவி அளித்தவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் பிஎம் கேர்ஸ் நிதி மூலம் என்னமாதிரியான பணிகள் செய்யப்பட்டுள்ளன என்பது விவரிக்கப்பட்டது. கொரோனாவில் பெற்றோரை இழந்து ஆதரவற்ற 4345 குழந்தைகளுக்கான செலவுகளை ஏற்றுக்கொண்டது போன்றவை எடுத்துக்கூறப்பட்டது.

பிஎம் கேர்ஸ் அறக்கட்டளை இதுவரை செய்த பணிகள், நாட்டின் இக்கட்டான சூழலில் இருக்கும் போது செய்த பங்களிப்புகுறித்து உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர். பிரதமர் மோடியும், பங்களிப்பு செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி தெரிவித்தார்

32 ஆண்டுகளுக்குப்பின் ! சினிமா பார்க்கத் தயாராகும் மக்கள்: ஸ்வாரஸ்யத் தகவல்

பிஎம் கேர்ஸ் அமைப்பு, விசாலமான நோக்கத்துடன் அவசரகாலத்திலும், சோதனைக் காலகட்டத்திலும் தேவையான உதவிகளை வழங்கியது. நிவாரண உதவிகள்  மட்டுமின்றி, பாதிப்புகளை குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் எனக் எடுத்துக் கூறப்பட்டது.

அறக்கட்டளைக்கு புதிதாக வந்துள்ள உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். தவிர, பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு ஆலோசனைக் குழுவுக்கு உறுப்பினர்களாக  முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி ராஜீவ் மெஹ்ரிஷி, இன்போசிஸ் நிறுவனத்தின் சுதா மூர்த்தி, பிராமல் நிறுவனம், மற்றும் இந்தியா கார்ப்ஸ் முன்னாள் சிஇஓ ஆனந்த் ஷா ஆகியோரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.

அறக்கட்டளைக்கு புதிதாக வந்துள்ள உறுப்பினர்கள், ஆலோசகர்கள், பரந்த சிந்தனையுடன், பிஎம் கேர்ஸ் அமைப்பு செயல்பட பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். பொதுவாழ்க்கையில் புதியஉறுப்பினர்களுக்கு இருக்கும் பெரிய அனுபவம், மக்களின் பல்வேறு தேவைகளுக்கு நிதியை சிறப்பாகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்தார்
 

click me!