பள்ளி மாணவர்களின் பைகளில் ஆணுறை, சிகரெட்… பெங்களூர் பள்ளியில் மேற்கொண்ட சோதனையின் போது அதிர்ச்சி!!

By Narendran SFirst Published Nov 30, 2022, 10:22 PM IST
Highlights

மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன் எடுத்துச் செல்வதைத் தடுக்க பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்திய அதிரடி சோதனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போன் எடுத்துச் செல்வதைத் தடுக்க பெங்களூரில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்திய அதிரடி சோதனை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பள்ளிக்கு செல்போன் எடுத்து வருவதை தடுக்க பெங்களூர் பள்ளி ஒன்றில் 8, 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களின் பைகளில் இருந்து செல்போன்கள் தவிர ஆணுறைகள், வாய்வழி கருத்தடைகள், லைட்டர்கள், சிகரெட்டுகள் மற்றும் ஒயிட்னர்களை அதிகாரிகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: நான்கு மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களுடன் திருமணம்… அதிர்ச்சியை ஏற்படுத்திய பிகார் நபரின் செயல்!!

முன்னதாக கர்நாடகாவில் உள்ள ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் அசோசியேட்டட் மேனேஜ்மெண்ட்ஸ் (KAMS) பள்ளிகள் மாணவர்களின் பைகளை சோதனை செய்யுமாறு கேட்டுள்ளது. அதன்பேரில் சோதனை செய்யப்பட்ட போது 10-ம் வகுப்பு சிறுமியின் பையில் அதிகாரிகள் ஆணுறை இருந்ததாகக் கூறினார். சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் தனது நண்பர்களை குற்றம் சாட்டியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80% பள்ளிகளில் சோதனை நடத்தப்பட்டது. மாணவர் ஒருவரிடமிருந்து வாய்வழி கருத்தடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதையும் படிங்க: 2021-22 ஜூலை-செப். காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் அதிகரிப்பு… என்.எஸ்.ஓ (NSO) வெளியிட்ட அறிக்கையில் தகவல்!!

இந்த சம்பவத்திற்குப் பிறகு, சில பள்ளிகள் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்புகளை நடத்தப்பட்டது. அப்போது பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் குழந்தைகளின் திடீர் நடத்தை மாற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. இந்த நிலைமையை சிறப்பாகக் கையாள, குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் பையில் இருந்து ஆணுறைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!