அடுத்த கல்வியாண்டிற்கான கிளாட் தேர்வு டிச.18 ஆம் தேதி நடக்கவுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள 32 சட்ட பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை கிளாட் (CLAT - Common Law Admission Test) எனும் நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ஆண்டுத்தோறும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அடுத்த (2023- 2024) கல்வியாண்டியற்கான கிளாட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய சட்ட பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி, வரும் டிச. 18 ஆம் தேதி கிளாட் நுழைவுத்தேர்வு நடத்தபடவுள்ளது.
மேலும் படிக்க:ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ..
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.11.2022. https://consortiumofnlus.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் 4 ஆயிரம் ரூபாயும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 3,500 ரூபாயும் செலுத்த வேண்டும். கிளாட் நுழைவுத் தேர்வை பொறுத்தவரை மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு சுமார் 2 மணி நேரம் தேர்வு நடைபெறும்.
மேலும் படிக்க:ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ