
உத்தராகண்ட்டில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டெஹ்ரி என்கிற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அப்பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கியதால் அதிலிருந்த மக்கள் பதறியடித்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. உத்தராகண்ட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை 8.33 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்... Air Pollution in Delhi: காற்றுமாசு நோய்: டெல்லி-என்சிஆர் பகுதியில் ஐந்தில் 4 குடும்பங்கள் பாதிப்பு