இனி கூகுள், மெடா மூலம் கிடைக்கும் செய்தி வருவாயில் அரசுக்கு பங்கு.. மத்திய அரசு திட்டம்.!

Published : Jul 16, 2022, 01:36 PM ISTUpdated : Jul 16, 2022, 01:42 PM IST
 இனி கூகுள், மெடா மூலம் கிடைக்கும் செய்தி வருவாயில் அரசுக்கு பங்கு.. மத்திய அரசு திட்டம்.!

சுருக்கம்

இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை பயன்படுத்தும் கூகுள், மெடா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் கிடைக்கும் வருவாயை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை பயன்படுத்தும் கூகுள், மெடா, ட்விட்டர் உள்ளிட்ட உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் கிடைக்கும் வருவாயை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்திய செய்தி நிறுவனங்கள், இணைய செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை பயன்படுத்தும் கூகுள் (யூடியூப் நிறுவனத்திற்கும் சொந்தமானது),  மெடா(ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளர், மைக்ரோசாப்ட், ஆப்பிள், ட்விட்டர், அமேசான் பே ஆகிய உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதில் கிடைக்கும் வருவாயை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மத்திய அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- டிஜிட்டல் ஊடகங்களுக்கும் கடிவாளம்: மத்திய அரசு சுறுசுறுப்பு

இதே நிலைபாட்டைதான், ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. ஐரோப்பிய யூனியனிலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இதே நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. தற்போது அமலில் உள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களின் ஒரு அங்கமாக ஒழுங்காற்று தலையீட்டின் மூலம் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் டிஜிட்டல் விளம்பரத்தின் சந்தை ஆற்றல், இந்திய ஊடக நிறுவனங்களை பாதகமான நிலையில் வைக்கிறது. இது புதிய சட்டங்கள் மற்றும் விதிகளின் பின்னணியில் தீவிரமாக ஆராயப்படும் ஒரு பிரச்னையாகும் என்றார். சுதந்திரமான செய்தி மற்றும் விளம்பர நிறுவனங்களின் செய்திகளையும் தகவல்களையும் பயன்படுத்தி கொள்வதற்கான வருவாயை பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள திட்டமிட்டிருப்படிருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க;- சங்கி மட்டும் இல்லை ஆனா துரோகம், ஊழல், நாடகம் இருக்குது; வம்பு இழுத்த மஹூவா மொய்த்ரா

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!
இண்டிகோ விமான சேவை சீராகிவிட்டது! 5% விமானங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு!