யார் இந்த யாசின் மாலிக்... காஷ்மீர் பள்ளத்தாக்கை வன்முறை காடாக மாற்றியது முதல்- முப்தி மகளை கடத்தியது வரை.

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2022, 11:32 AM IST
Highlights

தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் யாசின் மாலிக் தான் 1989ஆம் ஆண்டு த்ன்னை கடத்தியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மகள் ரூபியா சயீத் அடையாளம் காட்டியுள்ளார். 

தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியதாக  கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் யாசின் மாலிக் தான் 1989ஆம் ஆண்டு த்ன்னை கடத்தியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் மகள் ரூபியா சயீத் அடையாளம் காட்டியுள்ளார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரூபியா சயீத்தை கடத்தி வைத்துக்கொண்டு ஐந்து பயங்கரவாதிகளை விடுவிக்க யாசின் மாலிக் நிர்ப்பந்தித்தது தற்போது உறுதியாகியுள்ளது.

யார் இந்த யாசின் மாலிக்...

ஸ்ரீநகரில் 1966 ஆம் ஆண்டு பிறந்தவர்தான் யாசின் மாலிக். இவர் காஷ்மீர் விடுதலை முன்னணி என்ற இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராவார், காஷ்மீரை இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடம் இருந்தும் பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என கோரி ஆயுதமேந்திய கிளர்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர் ஆவார்.  இதனால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல வன்முறைகளுக்கு காரணமாக இருந்தவர் யாசின், பிரிவினைவாத வழக்கில் 17 வயதிலேயே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர், பின்னர் 1989  காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து விடுதலை வேண்டும் என  தீவிரமாக ஆயுதமேந்திப் போராடிய இவர், 1983ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக ஸ்ரீநகரில் நடந்த முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க முயன்றதாக கைது செய்யப்பட்டவர்.

பயங்கரவாத செயல்கள்... 

இதன் மூலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பொதுமக்கள் மத்தியில் பிரபலமானார் யாசின் மாலிக். பின்னர் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு நான்கு மாதங்கள் சிறையில் இருந்தார்,1980 களில் இந்திய பாதுகாப்பு படையினரின் வன்முறையால்தான் ஆயுதமேந்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அப்போது அவர் கூறினார். அக்கால கட்டத்தில் தீவிர காஷ்மீர் பிரிவினைவாத தலைவராக அறியப்பட்ட யாசின் மாலிக் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்,

இதையும் படியுங்கள்: ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் மீது தடை… இந்தியாவிற்கு மட்டும் விலக்கு அளித்து அமெரிக்கா தீர்மானம்!!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டினார் என்ற குற்றச்சாட்டில் 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட இவர் மீது டெல்லி INA  நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்த நிலையில் யாசின்  மாளிகைக்கு 2022 கடந்த மே மாதம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது ஆயுள் சிறைவாசியாக இருந்து வருகிறார், ஆனால் அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என NIA கோரிய நிலையில் ஆயுள் தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

யாசினுக்கு பாகிஸ்தான் ஆதரவு.. 

இதற்கிடையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை பாகிஸ்தானில் உள்ள பல முன்னணி தலைவர்கள் கண்டித்து அறிக்கை விட்டனர், ஆதாரமற்ற குற்றச்சாட்டில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், இது இந்திய நீதித்துறையின் கருப்பு நாள் என்றும் அவர் கண்டித்தனர். யாசின் மாலிக்கை கைது செய்து சிறைப்படுத்தலாம், ஆனால் அவரது விடுதலை வேட்கையை ஒருபோதும் தடுக்க முடியாது என பாகிஸ்தான் தலைவர்கள் அவருக்கு ஆதரவாக கூறினார். 

யாசினின் பாக்கிஸ்தான் மனைவி..

இதுகுறித்து கருத்து தெரிவித்த யாசின் மாலிக்கின் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மனைவி மஷால் ஹூசைன்,  எனது கணவர் குற்றமற்றவர், யாசினை ஒருபோதும் உங்களால் தோற்கடிக்க முடியாது, அவர் ஒரு போராளி என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

காஷ்மீர் மக்கள் மத்தியில் யாசின்...

இதுவரை காஷ்மீர் பிரிவினைவாதத்தை பல இயக்கங்கள் தலைவர்கள் பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் வலியுறுத்தி வந்துள்ளனர். உண்மையிலேயே யாசின் மாலிக் காஷ்மீர் மக்களின் கவனத்தை ஈற்றவராக இருக்கலாம்  ஆனால் நம்பிக்கைக்குரியவர் அல்ல, இவர் காஷ்மீர் பிரிவினை வாதத்தை வலியுறுத்தி வந்த ஷபீர் ஷா, சையத் அலி ஷா கிலானி போன்ற பிரிவினைவாத தலைவர்களை போல் காஷ்மார் பள்ளத்தாக்கின் முழு செல்வாக்கு இல்லை, காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு சில இடங்களில் மட்டுமே அவருக்கு ஆதரவு உள்ளது, யாசின் மாலிக் ஒரு ஏஜென்ட் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் அவரைக் குறித்து எண்ணுவதே இதற்கு காரணம்.

இதையும் படியுங்கள்: gold rate today: தங்கம் வாங்க, பொன்னான நேரம்! சவரன் ரூ.36ஆயிரத்தை தொடுகிறது: இன்றைய விலை நிலவரம் என்ன?

அவர் தனது சுயநலத்திற்காக, சொந்த ஆதாயத்திற்காக, இந்தியா பாகிஸ்தான் என இரண்டு நாடுகளுடனும் கைக் கோர்த்து செயல்படுகிறார் என்ற விமர்சனம் அவர்மீது இருந்து வருகிறது. ஒரு கட்டத்தில் ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த அவர் 1990களுக்குப் பிறகு ஜனநாயக வழியைத் தேர்ந்தெடுத்ததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் வன்முறையை விட்டு ஜனநாயக பாதையை கையில் எடுத்த இவர், டெல்லி காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்து காஷ்மீர் பிரச்சினையை அனைத்து தரப்பினரும் ஒன்றாக அமர்ந்து பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

கடத்தல் வழக்கு- யாசின் தலைமேல் கத்தி..

தற்போது தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டினார் என்ற வழக்கில் அவர் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருந்து வருகிறார், இந்நிலையில் 1989 ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத் மகள் கடத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது, அதற்கான விசாரணை முப்தி முகமது சயீத் மகள் ரூபியாவை சிபிஐ சாட்சிக்கு அழைத்து இருந்தது, இந்நிலையில்  1889 தன்னை கடத்திவர்களில் யாசின் மாலிக்கும் ஒருவர் என அவர் அடையாளம் காட்டியுள்ளார். 
இது யாசின் மாலிக்குக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

உள்துறை அமைச்சரின் மகள் கடத்தல்...

1990களில்  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் உச்சத்தில் இருந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபியா சயீத் கடத்தப்பட்டார், முப்தி முகமது சயீத் ஜம்மு காஷ்மீரில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தார், அப்போது உள்துறை அமைச்சரின் மகள் கடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஐந்து பயங்கரவாதிகளை விடுவித்தால் முப்தி மகள் ரூபியாவை விடுவிப்பதாக ஜே.கே.எல்.எப்  அமைப்பு நிர்ப்பந்தித்தது. அதனடிப்படையில் ரூபியாவை மீட்க பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டனர், இதற்கு மூளையாக செயல்பட்டவர் யாசின் மாலிக் என அப்போது குற்றம்சாட்டப்பட்டது இந்நிலையில்தான் ரூபியா சயீத் யாசின் மாலிக் தன்னை கடத்தியவர்களில் ஒருவர் என அடையாளம் காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 1990 ஸ்ரீநகரில் ராகுல் போராவின் பயங்கரவாத தாக்குதலுக்கு யாசின் மாலிக் உடந்தையாக இருந்து செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது இதுதொடர்பான வழக்கு சிபிஜ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த தீவிரவாத தாக்குதலில் விமானப்படை வீரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 40 பேர் பலத்த காயமடைந்த 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!