பிரதமரை கொல்ல சதி.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பா? விசாரணையில் வெளியான பகீர் தகவல்..!

By vinoth kumarFirst Published Jul 16, 2022, 11:42 AM IST
Highlights

பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் துண்டு பிரசுரங்களை கைப்பற்றபட்டது. அதில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், வியூகங்கள் இடம்பெற்றிருந்ததாக பீகார் போலீசார் தெரிவித்தனர். 

பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டவர்களுடன் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி கடந்த 12-ம் தேதி பீகார் தலைநகர் பாட்னா சென்றார். மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பிரதமரை கொலை செய்ய சதி தீட்டம் தீட்டியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உளவுத் துறை அளித்த தகவலின்படி கடந்த 11-ம் தேதி மாலை பாட்னாவின் நயா டோலா பகுதியில் பாட்னா போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க;- parliament: நாடாளுமன்ற வளாகத்தில் போரட்டம், தர்ணா, உண்ணாவிரதத்துக்கு தடை: மாநிலங்களவை செயலாளர் உத்தரவு

அப்போது, முகமது ஜலாலுதீன், அக்தர் பர்வேஸ் ஆகிய 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதில் அக்தர் பர்வேஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் போலீஸ் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாக சொல்லப்படும் இடத்தில் சோதனை நடத்திய போது அங்கே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆவணங்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மேலும், பிரதமரின் பயணத்துக்கு முன்பாக கடந்த 6, 7-ம் தேதிகளில் பாட்னாவில் தீவிரவாதிகள் ஒன்று கூடியுள்ளனர். அப்போது பிரதமரை எவ்வாறு கொலை செய்வது என்பது குறித்து சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. கேரளா, மேற்குவங்கம், உத்தர பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் பாட்னாவுக்கு வந்து ஆயுத பயிற்சி பெற்று உள்ளனர். பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு நிதியுதவி கிடைத்துள்ளதும் தெரியவந்தது. மேலும், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் துண்டு பிரசுரங்களை கைப்பற்றபட்டது. அதில் வரும் 2047-ம் ஆண்டில் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள், வியூகங்கள் இடம்பெற்றிருந்ததாக பீகார் போலீசார் தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- ஜார்க்கண்ட் வந்தடைந்த பிரதமர் மோடி… எய்ம்ஸ், விமான நிலையம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல்!!

இதனிடையை, கைது செய்யப்பட்டவர்களுக்கு தமிழ்நாட்டில் தொடர்பு இருந்தது என பாட்னா சிறப்பு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான விவரங்கள் தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பப்பட்டு  விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 
 

click me!