குஜராத் மாநிலத்தில் மாச்சூ ஆற்றில் கேபிள் பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குஜராத் மாநிலத்தில் மோர்பியில் கேபிள் தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது பழுதடைந்து இருந்தது. இதை அடுத்து பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணி சமீபத்தில் நடந்தது. புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 26ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று கேபிள் பாலத்தில் சுமார் 500 பேர் நின்றனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் கேபிள் பாலத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் ஆற்றுக்குள் விழுந்தனர்.
இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !
சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர். இந்த கோர விபத்தில் ஆற்று நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 132ஐ அதிகரித்துள்ளது. 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை மீட்கும் பணிகள், விடிய விடிய தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்தால் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பலரின் நிலை குறித்த அச்சம் எழுந்துள்ளதுவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 35 பேர் இறந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
PM spoke to Gujarat CM and other officials regarding the mishap in Morbi. He has sought urgent mobilisation of teams for rescue ops. He has asked that the situation be closely and continuously monitored, and extend all possible help to those affected.
— PMO India (@PMOIndia)இதையும் படிங்க..குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !
இதையும் படிங்க..கோஷ்டி பூசலில் தென்காசி திமுக.. அறிவாலயம் கொடுத்த அதிர்ச்சி தகவல் - கவலையில் உடன்பிறப்புகள்