
பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் டிவீட் செய்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 60 ஆவது குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரது திருவுருவச் சிலைக்கும், உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக.. காங்கிரஸ் & ஆம் ஆத்மி நிலை ? ஏசியாநெட் நியூஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் !
அந்த வகையில் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், பெருமதிப்பிற்குரிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரை அவரது குருபூஜை நாளில் வணங்குகிறேன். சமூக மேம்பாடு, விவசாயிகள் நலன், வறுமை ஒழிப்பு முதலியவை உட்பட நம் தேசத்திற்காக அவர் ஆற்றிய தலைசிறந்த பங்களிப்பை நினைவு கூர்கிறேன்.
இதையும் படிங்க: ஓய்வு பெற்றவர்களுக்கு SBI யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு.. நாளைக்கு தான் விண்ணப்பிக்க கடைசி தேதி..
அவரது கொள்கைகள் நம்மை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக துணை பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.