குஜராத்தில் பிரம்மாண்ட சுற்றுலா தளங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார்.

By Thanalakshmi VFirst Published Oct 30, 2022, 11:48 AM IST
Highlights

குஜராத் வல்லபாய் பட்டேல் ஒற்றுமை சிலை அருகே பிரதமர் மோடி விஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பசுமை பூங்கா மற்றும் மியாவாக்கி காட்டினை பிரதமர் மோடி இன்று நாட்டிக்கு அர்பணிக்கிறார்.

குஜராத்தில் மிக பெரிய வல்லபாய் படேல் ஒற்றுமை சிலை பிரதமர் மோடியால் 4 ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. தற்போது இந்த சிலையை நாடு முழுவதிலிருந்து 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையும், திட்டங்களும் தான், ஒவ்வொரு வயதினரையும் ஈர்க்கக்கூடிய சுற்றுலா மையமாக இதனை மாற்றியுள்ளது. இந்நிலையில் இன்று, பிரதமர் மோடி ஒற்றுமை சிலை அருகில் மேலும் இரண்டு சுற்றுலா தலங்களை நாட்டிற்கு அர்பணிக்கிறார்.

பிரதமர் மோடி விசன் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ள நாட்டிலே மிக பெரிய 2,100 மீட்டர் பாதையுடன் மூன்று ஏக்கரில் அமைந்துள்ள கார்டன் மற்றும்  மியாவாக்கி காட்டினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

மேலும் படிக்க:இது திணிப்பு அல்ல; வெறும் பரிந்துரை மட்டுமே... பிரதமர் மோடி கூறுவது என்ன?

இவை வெறும் எட்டு மாத குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குஜராத் நர்மதா மாவட்டத்தில் கெவாடியாவில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட கார்டன், சுற்றுலா பயணிகளுக்கு நேர்மறை சிந்தனைகளை அளிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த பூங்காவில் மூலிகை, நாட்டு மரங்கள் உள்ளிட்ட சுமார் 1,80,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. முன்னதாக இந்த இடம் அந்த நகரின் மக்கள் குப்பையை கொட்டும் இடமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  அதேபோல் ஏக்தா நகரில் மியாவக்கி நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டு காடு, சுற்றுலா பயணிகளுக்கு விருந்தாக அமையும். 

இங்கு மலர் தோட்டம்; மரத்தோட்டம்; பழத்தோட்டம்; மருத்துவத் தோட்டம்; கலப்பு இனங்களின் மியாவாக்கி பிரிவு ;டிஜிட்டல் நோக்குநிலை மையம் ஆகியவை அடங்கும்.  குஜராத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில்,மிக பெரிய திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க:Statue of Lord Shiva: பிரம்மாண்ட 369 அடி உயரம்! உலகிலேயே உயரமான சிவன் சிலை இன்று ராஜஸ்தானில் திறப்பு

click me!