Sujata Karthikeyan : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி தலைவருமான வி.கே.பாண்டியனின் மனைவி சுஜாதா ஆர் கார்த்திகேயனை, மிஷன் சக்தி துறையிலிருந்து, மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பொது நிர்வாகம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் துறையின் அறிவிப்பின்படி, ஒடியா மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் துறையின் கூடுதல் செயலாளரான மிஷன் சக்தியின் செயலர் சுஜாதா கார்த்திகேயன், அந்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டு இப்பொது பொது நிதித் துறையின் சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் ஏற்கனவே வி.கே பாண்டியனின் மனைவி திருமதி சுஜாதா கார்த்திகேயன் பார்த்து வந்த துறையை இனி ஷாலினி பண்டிட் மேற்கொள்வர் என்றும் அறிவித்துள்ளது. சரி இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விளக்கமாக காணலாம். தமிழரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி தலைவருமான வி.கே.பாண்டியனின் மனைவி தான் சுஜாதா கார்த்திகேயன்.
undefined
இந்த அதிரடி இடமாற்றத்துக்கு காரணம் என்ன?
சுஜாதா ஆர் கார்த்திகேயனை, மிஷன் சக்தி துறையிலிருந்து, “பொதுமக்கள் அல்லாத துறைக்கு” மாற்ற இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது, பொது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியதாக பாஜக அளித்த புகாரைத் தொடர்ந்து தான் இந்திய தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்து என்றும் குறைப்படுகிறது.
"பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி, தனது கணவரின் செல்வாக்கின் காரணமாக, தொழில் நிபுணத்துவத்திற்கு விடைகொடுத்து, பிஜேடியின் முகவராக தீவிரமாக ஈடுபடுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அரசு அதிகாரியாக இருந்துகொண்டு தனது கணவரின் கட்சிக்காக, அதுவும் தேர்தல் நேரத்தில் அவர் செயல்பட்டிருக்க கூடாது".
"அதை மீறி அவர் தனது கணவரின் கட்சிக்காக எந்த ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும் என்றால் ஒன்று அவர் விடுப்பில் சென்றிருக்க வேண்டும், அல்லது பொதுப் பரிவர்த்தனையில் ஈடுபடும் தனது கடமைகளில் இருந்து அவர் தன்னைத் துண்டித்துக்கொண்டிருக்க வேண்டும்” என்று அவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய இடமாற்றத்தை உறுதிப்படுத்திய மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், அவரது நியமனம் குறித்த அறிவிப்பை ஓரிரு நாட்களில் அரசு வெளியிடும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ராஜீவ் சந்திரசேகர், பாஜக மூத்த தலைவர் சுதான்சு திரிவேதி, ஓம் பதக் ஆகியோர் அளித்த புகாரில், சுஜாதா கார்த்திகேயன் பிஜேடியின் முன்னணி நபராகத் தேர்தலில் தீவிரமாகப் பங்கேற்று வருவதாகவும் பாஜக கூறியுள்ளது நினைவுகூரத்தக்கது. மிஷன் சக்தியின் கீழ், ஒடிசா அரசு சுமார் 70 லட்சம் பெண்களை உள்ளடக்கிய ஆறு லட்சத்திற்கும் அதிகமான சுயஉதவி குழுக்களை (SHGs) உருவாக்கியுள்ளது.
கடந்த 2001ல் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ், ஒடிசா அரசாங்கம் பல்வேறு வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்த சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன்களை உறுதி செய்கிறது. இந்த திட்டம் நவீன் பட்நாயக் அரசாங்கத்தின் முதன்மையான திட்டங்களில் ஒன்றாகும், ஏனெனில் கிராமப்புற பெண்கள் பிஜேடியின் விசுவாசமான வாக்கு வங்கியாகவும், அதன் தொடர்ச்சியான தேர்தல் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய காரணியாகவும் அறியப்படுகிறார்கள்.
கடந்த 2019 தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, பட்நாயக் அரசாங்கம் பெண் சுய உதவிக்குழுக்களுக்கு 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு வணிகங்களை வழங்குவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழக ஒப்பந்தகாரர்கள்: ஸ்மிருதி இரானி பரபரப்பு குற்றச்சாட்டு!