உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற பூர்ணகிரி கோயிலுக்கு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர்.
சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது கருங்கல் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் உத்தரகாண்டில் பிரசித்தி பெற்ற பூர்ணகிரி கோயிலுக்கு பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது இரவு சாப்பிடுவதற்காக ஷாஜஹான்பூர் அருகே சாலையோர உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. சிலர் சாப்பிடுவதற்காக சென்ற நிலையில், மற்றவர்கள் பேருந்திலேயே இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியது மட்டுமல்லாமல் பேருந்து மீது கவிழ்ந்தது. இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: டெல்லி மருத்துவமனையில் தீ விபத்து: 6 குழந்தைகள் பலி; 12 பேர் காயங்களுடன் மீட்பு
மேலும் படுகாயமடைந்த 10 பேரை போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரி, அதிவேகத்தில் பயணித்ததே இந்த விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்து.. 24 பேர் பலியான சம்பவம்.. குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..