உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சௌரப் சிங் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் நூலிழையில் உயிர் தப்பினார். பொது இடத்தில் மது அருந்தியது குறித்து எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சௌரப் சிங் நூலிழையில் உயிர் தப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள ஷிவ் காலனியில் உள்ள அவரின் வீட்டின் அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். பொது இடத்தில் சிலர் மது அருந்தியது குறித்து சௌரப் சிங் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து சௌரப் சிங் சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நிர்வாகத்திடம் இருந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்..
டிஏபி உரங்களுக்கான சிறப்பு மானியம் நீடிப்பு! புத்தாண்டில் விவசாயிகளுக்குப் பரிசு!
காவல்துறையிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், புதன்கிழமை இரவு உணவிற்குப் பிறகு தனது மனைவியுடன் வழக்கமான நடைபயிற்சிக்கு சென்றபோது, தனது வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் இரண்டு இளைஞர்கள் மது அருந்துவதைக் பார்த்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது அவர்களிடம் ஏன் பொது இடத்தில் மது அருந்துகிறீர்கள் என்று சவுரப் சிங் கேள்வி எழுப்பியதாகவும், அந்த இளைஞர்கள் பதிலுக்கு பவாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என்றும், பின்னர் அந்த நபர்கள் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொலை முயற்சி
சௌரப் சிங், இந்தச் சம்பவத்தை தனது உயிருக்கு எதிரான முயற்சி என்று தெரிவித்தார். தினமும் மாலை நடைப்பயிற்சி மேற்கொள்வது நன்கு தெரிந்ததால், தான் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டதாகவும் கூறினார். இந்த சம்பவத்தின் போது, தனது பாதுகாவலர் தூரத்தில் இருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது என்றும்,. தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து இரவு உணவுக்குப் பிறகு மனைவியுடன் வாக்கிங் செல்வதாக எம்எல்ஏ சௌரப் சிங் கூறினார்..
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சந்தேக நபர்களை அடையாளம் காண சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். எனினும் இதுவரை குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
6 மாதங்களுக்கு பிறகு குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை: புத்தாண்டில் மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன அரசு!
லக்கிம்பூர் கேரியின் சதர் கோட்வாலி பகுதியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதியளித்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.