New Year Eve's shopping list: 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தில் பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளங்களில் எதிர்பாராத பொருட்கள் அதிகளவில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ஆலு பூஜியா முதல் ஆண்களின் உள்ளாடைகள் வரை விதவிதமான பொருட்கள் வாடிக்கையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
2025 புத்தாண்டு தினத்தைக் கொண்டாட மக்கள் பலவிதமான பொருள்களை வாங்கியுள்ளனர். பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் போன்ற தளங்களில் அதிக ஆர்டர்கள் வந்துள்ளன. புத்தாண்டு பார்ட்டிக்கு விதவிதமான பொருட்களை வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்துள்ளனர். அவற்றில் அதிகம் விற்பனையான சில பொருள்கள் எவை என்று பார்க்கலாம்.
பிளிங்கிட் (Blinkit) நிறுவனத்தின் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா வெளியிட்ட எக்ஸ் பதிவில், புதிய ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா எந்தெந்த பொருள்களை அதிகமாக வாங்கியுள்ளனர் என்று கூறினார். அதன்படி, ஆலு பூஜியா பிளிங்கிட் ஆர்டர்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
2,34,512 ஆலு புஜியா பாக்கெட்டுகள்; 45,531 டானிக் தண்ணீர் கேன்கள்; 6,834 ஐஸ் கட்டிகள் பாக்கெட்டுகள்; 1,003 லிப்ஸ்டிக்குகள், 762 லைட்டர்கள் புத்தாண்டை முன்னிட்டு ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என்றும் அடுத்த 10 நிமிடங்களில் அனைத்தும் டெலிவரி செய்யப்படும் எனவும் திண்ட்சா குறிப்பிட்டுள்ளார்.
Enroute right now👇
2,34,512 packets of aloo bhujia
45,531 cans of tonic water
6,834 packets of ice cubes
1003 lipsticks
762 lighters
All should be delivered in the next 10 minutes. Party's just getting started!
ஸ்விக்கி (Swiggy) இன்ஸ்டாமார்ட் இணை நிறுவனர் பானி கிஷன், புத்தாண்டு தினத்தன்று மட்டும் 100 கிலோவுக்கு மேல் ஐஸ் ஆர்டர் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். இரவு 7:41 மணியளவில் 119 கிலோ ஐஸ் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்விக்கியின் இணை நிறுவனர் தெரிவித்தார். புத்தாண்டு இரவில் சென்னையில் இருந்து குளிர்பான ஆர்டர்கள் இரட்டிப்பாக்கியுள்ளன. இருந்தாலும் மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகியவை அதைவிட முன்னிலையில் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"புத்தாண்டு தினத்தன்று ஒரு வாடிக்கையாளர் கண்ணை மூடுவதற்கான blindfold மற்றும் கைவிலங்குகளை ஆர்டர் செய்துள்ளார். அவர்கள் மிகவும் மறக்கமுடியாத புத்தாண்டு இரவைத் திட்டமிட்டுள்ளனர் போல் தெரிகிறது" என்று பானி கிஷன் பதிவிட்டுள்ளார்.
Ice hit its peak at 7:41 PM with 119 kgs delivered in that minute! 👀
Despite doubling their orders, Chennai still trails behind Mumbai, Bengaluru, and Hyderabad when it comes to stocking up for chilled drinks tonight. 🧊
புத்தாண்டு ஆர்டர்களில் சிற்றுண்டிகளைவிட அதிகமாக ஆண்களின் உள்ளாடைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன! "நான் எதிர்பார்க்காத அளவு அதிக அளவில் ஆர்டர் மற்றொரு பொருள் ஆண்களின் உள்ளாடைகள்" என பிளிங்கிட் சிஇஓ திண்ட்சா குறிப்பிட்டுள்ளார்.