சத்தீஸ்கரில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சிவனுக்கு காணிக்கை செலுத்த தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் வளாகம் முழுவதும் ரத்தம் சிந்தியபடி, தனிமையில் தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டார்.
சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் மூடநம்பிக்கையின் உச்சமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்துவதற்காக தனது நாக்கை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் தேவர்கட்டாவில் உள்ள ஆச்சரிபாலி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி, தனது நாக்கை அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்தியுள்ளார். கோவில் வளாகம் முழுவதும் ரத்தம் சிந்தியபடி, தனிமையில் தியானம் செய்வதற்காக கோவிலுக்குள் இருந்தபடி தன்னைத் தானே பூட்டிக்கொண்டிருக்கிறார்.
காவல்துறையினர் சம்பவம் நடந்த கோவிலுக்குள் செல்ல கிராம மக்கள் அனுமதிக்கவில்லை. திங்கட்கிழமை காலை 7 மணியளவில், மாணவி தனது நாக்கை அறுத்து, தனது வீட்டிற்கு அருகில் உள்ள குளத்திற்கு அருகில் உள்ள சிவன் கோவிலில் காணிக்கையாகக் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
பெண்கள் புழங்கும் இடத்தில் ஜன்னலே இருக்கக் கூடாது! தடை விதித்த தாலிபன் அரசு!
காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதி நிர்வாக அதிகாரிகளுடன் கோயிலுக்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் கோவிலுக்குள் செல்லவிடாமல் கிராம மக்கள் தடுத்துவிட்டனர். கோவிலை நாலாபுறமும் சுற்றி வளைத்த மக்கள் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
காவல்துறையினரும் அதிகாரிகளும் சிறுமியின் பெற்றோரிடம் வாக்குவாதம் செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். ஆனால் சிறுமியின் பெற்றோர் அவர்களின் பேச்சைக் கேட்க மறுத்துவிட்டனர். இதனால், உடனடியாக 108 ஆம்புலன்சில் டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டனர்.
பள்ளியில் படிக்கும் மாணவி இப்படி ஒரு செயலில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இது குறித்து ஊர்மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் பணக்கார முதல்வர் யார்? ஏழை முதல்வர் யார்? ஏடிஆர் வெளியிட்ட சொத்து மதிப்பு!