காவல் ஆய்வாளரைக் கொடுமையாக தாக்கும் அதிர்ச்சி வீடியோ... சிக்கிய முக்கிய கட்சி பிரமுகர்!

Oct 20, 2018, 1:35 PM IST

உத்தரப்பிரதேசத்தில் பாஜக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரான மனிஷ், ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஹோட்டலுக்கு பெண் வழக்கறிஞருடன் வந்த காவல் துணை ஆய்வாளருக்கும், ஹோட்டலில் பணிபுரிபவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. 

இதனால் அப்பகுதிக்கு வந்த பாஜக கவுன்சிலர் மனிஷ் போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென வாக்குவாதம் அதிகரித்து மனிஷ் காவல் துணை ஆய்வாளரை கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.