
தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மேலும் ஒரு சிறுத்தை குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்தது. தென்னாப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு இந்த ஆண்டு பிப்ரவரி 18 அன்று 11 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டது. அதில் உதய் என்றழைக்கப்படும் சிறுத்தைக்கு கடந்த ஏப்.23 அன்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனை கவனித்த வனக் குழுவினர் அதனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதனை செய்த அவலம்.. ஆடையை மாற்ற சொன்னதாகவும் தகவல்
அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அன்று மாலை சிறுத்தை உயிரிழந்தது. இந்நிலையில் குணோ பூங்காவில் மேலும் ஒரு சிறுத்தை உயிரிழந்துள்ளதாக தலைமை வனப் பாதுகாவலர் தகவல் தெரிவித்துள்ளார். நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இருபது சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டன.
இதையும் படிங்க: ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இத்தனை வசதிகள் இலவசம்!
நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஒன்றான சாஷா, மார்ச் மாதம் இறந்தது. ஏப்.23 இரண்டாவது சிறுத்தை இறந்தது. தற்போது மேலும் ஒரு சிறுத்தை இறந்ததால் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தை உயிரிழப்பு 3 ஆக அதிகரித்துள்ளது.