
பண மோசடி குற்றச்சாட்டில் மணப்புரம் நிதி நிறுவனத்திற்கு தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) விதிமுறைகளை மீறி மொத்தம் 150 கோடி ரூபாய்க்கு மேல் பொது டெபாசிட்களை நிறுவனம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தொடர்ந்து இதுகுறித்த ஆதாரங்களை திரட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து பேசிய போது “ மணப்புரம் நிறுவனத்தின் திருச்சூர் தலைமையகம் மற்றும் அதன் விளம்பரதாரர்களின் வீடுகள் உட்பட நான்கு இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது. நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலுக்கு உடனடி பதில் கிடைக்கவில்லை.” என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க : கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்
பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை மணப்புரம் நிறுவனம் மேற்கொண்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆவணங்களை சேகரித்து நிறுவன அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், விளம்பரதாரர் வி.பி.நந்தகுமாரின் அலுவலகம் மற்றும் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையின் இந்த சோதனையை தொடர்ந்து இன்று பங்குச்சந்தையில் மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் பங்குகள் 9% சரிந்தன.
மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் இந்தியாவின் தங்கக் கடன் வழங்கும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றாகும். 1949-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அடகு ப்ரோக்கிங் மற்றும் பணக் கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய எம்.டி மற்றும் சி.இ.ஓ.வாக இருக்கும் நந்தகுமார், 1986ல் தனது தந்தை காலமானதையடுத்து தலைமைப் பொறுப்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆதார் அட்டையில் இந்த விவரங்களை சரிபார்க்கலாம்.. புதிய வசதியை அறிமுகம் செய்த UIDAI