மும்பை பத்ரா சாவல் மேம்பாட்டு திட்டத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 3 மாதங்களுக்குப்பின் இன்று சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
மும்பை பத்ரா சாவல் மேம்பாட்டு திட்டத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு 3 மாதங்களுக்குப்பின் இன்று சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்றவழக்குத் தொடர்பாக சஞ்சய் ராவத் மற்றும் அமலாக்கப்பிரிவு தரப்புவாதங்களையும் கேட்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே கடந்த அக்டோபர் 21ம்தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
சிவசேனா எம்.பி சஞ்சய்ராவத்திற்கு 14 நாள் நீதி மன்ற காவல்... சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் உத்தரவு.
இந்நிலையில் இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இறுதியாக இன்று சஞ்சய் ராவத்துக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஏறக்குறைய மூன்றரை மாதங்கள் சிறையில் இருந்த நிலையில் சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியது சிறப்பு நீதிமன்றம். கடந்த 3 மாதங்களாக மும்பையில் உள்ள ஆர்தர் சிறையில் சஞ்சய் ராவத் அடைக்கப்பட்டிருந்தார்.
சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் மனைவியும் அமலாக்கப்பிரிவு விசாரணைக்கு ஆஜர்
மும்பை புறநகரில் உள்ள கோரேகான் பகுதியில் பத்ரா சாவல் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம், சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராகக் கோரி 2 முறை சம்மன் அனுப்பினர்.
ஆனால், இருமுறையும் விசாரணைக்கு சஞ்சய் ராவத் ஆஜராகவில்லை.
சிவசேனா கட்சிக்கும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கும் இடையே கடும் அரசியல் மோதல் நடந்து கொண்டிருந்த நேரத்தில், சஞ்சய் ராவத்துக்கும் அமலாக்கப்பிரிவு குடைச்சல் கொடுத்தனர்.
சிவசேனா கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளராக இருந்து, அந்தக் கட்சியின் கருத்துக்களை சஞ்சய் ராவத் வெளிப்படையாகவும்,அதிரடியாகவும் தெரிவித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1ம்தேதி நள்ளிரவில் சஞ்சய் ராவத்தை அமலாக்கப்பிரிவு அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கைதுசெய்தனர்.
sanjay raut: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கைதுக்கு காரணம் என்ன? பத்ரா சாவல் நிலமோசடி என்றால் என்ன?
அந்த கைதுக்குப்பின், சஞ்சய் ராவத் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. பத்ரா சாவல் மேம்பாட்டுத் திட்டத்தில் நடந்த சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில், முக்கியப் பங்கு சஞ்சய் ராவத்துக்கு இருக்கிறது. திரைமறைவில் பணத்தை மாற்ற ராவத் அதிகமாக உதவி செய்துள்ளார் என்று அமலாக்கப்பிரிவு குற்றம் சாட்டியது.
இந்நிலையில் 2வது முறையாக ஜாமீன் கோரி சஞ்சய் ராவத் மனுத் தாக்கல் செய்தார், அதில், தன் மீது அமலாக்கப்பிரிவு தொடர்ந்த வழக்கு அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அரசியல் பழிவாங்கலுக்கு சிறந்த உதாரணம் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிபதி தேஷ்பாண்டே இறுதியாக சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளார்.