CJI DY Chandrachud:வார்த்தை பேசாது!என் வேலைதான் பேசும் ! மக்கள்தான் முக்கியம்: தலைமை நீதிபதி சந்திரசூட் சூசகம்

By Pothy Raj  |  First Published Nov 9, 2022, 1:43 PM IST

என் வார்த்தை பேசாது, என் செயல்தான் பேசும். மக்களுக்கு சேவை செய்வதுதான் என்னுடைய உச்சபட்ச முன்னுரிமை என்று உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சூசகமாகத் தெரிவித்தார்.


என் வார்த்தை பேசாது, என் செயல்தான் பேசும். மக்களுக்கு சேவை செய்வதுதான் என்னுடைய உச்சபட்ச முன்னுரிமை என்று உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சூசகமாகத் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

Tap to resize

Latest Videos

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டிருக்கு! நிதின் கட்கரி புகழாரம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே அந்தப் பதவியில் இருந்தார். அவருக்கு அடுத்தார்போல் தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி டிஒய் சந்திரசூட்டை கடந்த மாதம் 11ம் தேதி பரிந்துரை செய்தார். இதற்கு, குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்தார்.

தலைமை நீதிபதியாக இருந்த யுயு லலித் நேற்றுடன் ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து 50வது தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் இன்று பதவி ஏற்றார். 

தலைமை நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ள டிஒய் சந்திரசூட் அடுத்த 2 ஆண்டுகளுக்கு அதாவது 2024, நவம்பர் 11ம் தேதிவரை அந்தப் பொறுப்பில் இருப்பார். 

அரசு பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்க அவசரச் சட்டம்: கேரள அரசு முடிவு!!

தலைமை நீதிபதியாக டிஒய் சந்திரசூட் பதவி ஏற்றபின், உச்ச நீதிமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின், சந்திரசூட் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். 
அப்போது அவர் கூறுகையில் “ சாமானிய மக்களுக்கு சேவை செய்வதுதான் எனது முன்னுரிமை. அதைநோக்கித்தான் செல்வேன். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நான் பணியாற்றுவேன். 

அது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி, பதிவேட்டில் இருந்தாலும் சரி அல்லது நீதித்துறை சீர்திருத்தமாக இருந்தாலும் சரி, குடிமக்களின் ஒவ்வொரு அம்சத்திலும் நான் அக்கறை காட்டுவேன்.

உச்ச நீதிமன்ற 50வது தலைமை நீதிபதி!டிஒய் சந்திரசூட் வழங்கிய முக்கிய தீர்ப்புகள் என்ன?

இந்திய நீதித்துறையில் பணியாற்றுவதும், தலைமை ஏற்பதும் மிகப்பெரிய வாய்ப்பு, பொறுப்பு. இந்த தேசத்தின் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும்வகையில் எனது பேச்சும், செயலும் இருக்கும். எனது பேச்சை விட, செயல்தான் பேசும். 

இவ்வாறு சந்திரசூட் தெரிவித்தார்

click me!