Nitin Gadkari: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டிருக்கு! நிதின் கட்கரி புகழாரம்

Published : Nov 09, 2022, 12:39 PM IST
Nitin Gadkari: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டிருக்கு! நிதின் கட்கரி புகழாரம்

சுருக்கம்

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டினார்.

இந்தியாவில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் செய்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டினார்.

புதுடெல்லியில் டேக்ஸ்இன்டியாஆன்லைன் சார்பில்,  “டிஐஓஎல் விருது” வழங்கும் நிகழ்ச்சி நேற்றுநடந்தது. இதில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் சாலைப்போக்குவரத்து துறைஅமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

வரலாற்றில் முதல்முறை! இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விரைவில் விண்ணில் பாய்கிறது: எப்போது?

ஏழை மக்களுக்கு ஏராளமான நலன்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவுக்கு தாராளமய வர்த்தக, பொருளாதாரக் கொள்கைக்கான அவசியம் ஏற்பட்டது. கடந்த 1991ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில், நிதிஅமைச்சராக இருந்த மன்மோகன் சிங் காலத்தில்தான் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டது. அந்தப் பொருளாதாரத் சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவுக்கு புதிய வழிகாட்டப்பட்டு, தாராளமய பொருளாதாரத்துக்கு வழிகாட்டப்பட்டது

கர்நாடக அரசு தேர்வு: அனுமதிச் சீட்டில் தேர்வு எழுதுவோர் புகைப்படத்துக்கு பதிலாக சன்னி லியோன் படம்

தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மூலம் நாட்டுக்கு புதிய வழியைக் காட்டிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த தேசம் கடன்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் நான் அமைச்சராக இருந்தபோது, 1990களில் பொருளாதாரச் சீர்திருத்தம் ஏற்பட்டகாலத்தில் பணத்தை வசூலித்து சாலை அமைப்பதோம். தாராளமயப் பொருளாதாரக் கொள்கை என்பது, விவசாயிகளுக்கும், ஏழை மக்களுக்கானது. 

எந்த நாட்டையும் தாராளமய பொருளாதாரக் கொள்கை மேம்படுத்தும், வளர்ச்சி அடையச் செய்யும் என்பதற்கு சீனா சிறந்த உதாரணம். வேகமான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு, இந்தியாவுக்கு அதிகமான மூலதன முதலீடு தேவை. சாமானிய மக்களிடம் இருந்து பணத்தைப் பெற்று, தேசிய நெடுஞ்சாலையும் அமைக்கப்படுகிறது. 

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

26 பசுமை எக்ஸ்பிரஸ் சாலையை அமைத்து வருகிறோம். ஆனால், எந்தவிதமான பணப்பற்றாக்குறையையும் சந்திக்கவில்லை. தேசியநெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள, டோல்கேட் மூலம் கிடைக்கும் வருவாய், ரூ.40ஆயிரம் கோடியாக இருக்கிறது இது, 2024ம் ஆண்டில் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும். 

இவ்வாறு நிதின் கட்கரி தெரிவி்த்தார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாங்க இருக்கோம்.. விமான பயணிகளுக்கு கைகொடுத்த ஏர் இந்தியா.. இனி நோ கவலை!
கோவா தீ விபத்து: உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!