சட்டப்பிரிவு 370 ரத்து காரணமாக காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் குறைந்துள்ளது.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

By Raghupati RFirst Published Oct 28, 2022, 9:33 PM IST
Highlights

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பயங்கரவாத வழக்குகள் 34 சதவிகிதம் குறைந்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா:

ஹரியானா மாநிலம் சூரஜ்குண்டில் மாநில மற்றும் யூனியன் பிரதேச உள்துறை அமைச்சர்கள் மற்றும் உள்துறை செயலாளர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் சிந்தன் முகாம் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, நாட்டில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) ஆகியவை திருத்தப்பட்டு, விரைவில் நாடாளுமன்றத்தில் வரைவு மசோதா தாக்கல் செய்யப்படும்.

இதையும் படிங்க..டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!

தேசிய புலனாய்வு அமைப்பு:

சிஆர்பிசி மற்றும் ஐபிசியை சரியான நேரத்தில் திருத்துவது தொடர்பாக பல ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது என்றும்,  அவை சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை உள்ளடக்கிய வரைவு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேசிய புலனாய்வு அமைப்பு கூடுதல் அதிகாரங்களுடன் பலப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க..நவம்பர் 1 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

என்.ஐ.ஏ:

என்.ஐ.ஏவுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.2024 ஆம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை திறக்க முடிவு செய்துள்ளது. எல்லை தாண்டிய குற்றங்களை தடுக்க மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும்’ என்றும் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க..கோடநாடு எஸ்டேட் கொலை & கொள்ளை வழக்கில் அதிரடி திருப்பம்! சிபிசிஐடி போலீசார் எடுத்த அதிரடி முடிவு

click me!