PM Nnarendra Modi: நாடு முழுவதும் போலீஸாருக்கு ‘ஒரே தேசம், ஒரே சீருடை’: பிரதமர் மோடி யோசனை

Published : Oct 28, 2022, 02:00 PM IST
PM Nnarendra Modi: நாடு முழுவதும் போலீஸாருக்கு ‘ஒரே தேசம், ஒரே சீருடை’: பிரதமர் மோடி யோசனை

சுருக்கம்

நாடுமுழுவதும் போலீஸாருக்கு ஒரே தேசம், ஒரே சீருடை திட்டத்தை கொண்டு வரலாம். இது என் யோசனைதான், இதை மாநில அரசுகள் பரிசலீக்கலாம், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடுமுழுவதும் போலீஸாருக்கு ஒரே தேசம், ஒரே சீருடை திட்டத்தை கொண்டு வரலாம். இது என் யோசனைதான், இதை மாநில அரசுகள் பரிசலீக்கலாம், எந்த மாநிலத்தையும் கட்டாயப்படுத்தவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

மாநில உள்துறை அமைச்சர்கள், உள்துறை செயலாளர்கள், காவல் டிஜிபிக்கள், மத்திய போலீஸ் டிஜிபிக்கள் பங்கேற்கும் சிந்தரன் ஷிவிர் ஆலோசனைக் கூட்டம் ஹரியானாவில் உள்ள சுரஜ்குந்தில் நடந்து வருகிறது. 

டாடா ஏர்பஸ் விமான திட்டம் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு ஏன் மாற்றம்?ஆதித்யா தாக்கரே கேள்வி

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் 2வதுநாளான இன்று பிரதமர் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: 

குற்றங்களையும், குற்றவாளிகளையும் பிடிக்கவும், கையாள்வதிலும் மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு இருக்க வேண்டும். கூட்டுறவு கூட்டாட்சி என்பது அரசியலமைப்பின் உணர்வு மட்டுமல்ல, மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பொறுப்பாகவும் இருக்கிறது.

நாடுமுழுவதும் போலீஸாருக்கு ஒரே தேசம், ஒரே சீருடை இருக்கலாம். இது எனது யோசனை மட்டும்தான். எந்த மாநிலத்திலும் இதை புகுத்த நான் முயற்சிக்கவில்லை. என்னுடைய யோசனையைத் தெரிவித்தேன். இது நடக்கலாம் 5 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் அல்லது 100 ஆண்டுகளில்கூட நடக்கலாம். ஆனால், என்னுடைய கருத்து என்பதை தெரிவித்தேன்.

பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம்

நாடுமுழுவதும் போலீஸாரின் அடையாளம் என்பது, தனித்துவமாக இருக்க வேண்டும். பழைய சட்டங்களை ஆய்வு செய்து, அதை காலத்துக்கு ஏற்றார்போல் மாற்ற மாநில அரசுகள் முயல வேண்டும். சட்டம்ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அனைத்து விசாரணை அமைப்புகளுடனும் ஒத்துழைத்து செயல்பட வேண்டும்.

மக்களிடையே போலீஸ் துறை குறித்து நல்லவிதமான எண்ணங்களை உருவாக்குவது முக்கியமானது, இங்கிருக்கும் தவறுகள் அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசுக்கு உட்பட்டது. நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் ஒவ்வொருவரும் இணைந்துள்ளார்கள். ஒவ்வொருவரும் பணியாற்றுவதைப் பார்த்து ஊக்கம் பெற வேண்டும், உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும், ஒவ்வொரு மாநிலமும் கற்றுக்கொள்ள வேண்டும். உள்நாட்டுப் பாதுகாப்புக்காக அனைத்து மாநிலங்களும் ஒருங்கிணைந்து பணியாற்றுவது, அரசியலமைப்புக் கடமை, தேசத்துக்கான பொறுப்பாகும். 

ஆளுநரின் முடியைத் தொட்டால்கூட கேரள அரசைக் கலைக்யுங்கள்!சுப்பிரமணியன் சுவாமி காட்டம்

சாமானியர்களைப் பாதுகாக்க, சிறப்பான சேவை கிடைத்திட அனைத்து மாநிலங்களும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு என்பது நேரடியாக வளர்ச்சியுடன் தொடர்புடையது, அமைதியை நிலைநாட்டுவது ஒவ்வொருவரின் கடமையாகும். நாட்டின் வலிமை அதிரிக்கும்போது, ஒவ்வொரு குடிமகனின், குடும்பத்தின் சக்தியும் அதிகரிக்கும். 

எந்த ஒரு செய்தியையும் பார்வேர்டு செய்யும் முன் அதன் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதற்கு தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எந்தசெய்தியையும் பார்வேர்டு செய்யும் முன், அதன் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய வேண்டும்.  அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் நலனுக்கா, வளர்ச்சிக்கா, நாம் தன்னம்பிக்கை கொண்ட இளைய தலைமுறையை உருவாக்க வேண்டும்

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
புடின் விருந்தில் கலந்துகொள்ள சசி தரூருக்கு மட்டும் அழைப்பு! ராகுலுக்கு வெறுப்பேத்தும் பாஜக!