Tata Airbus:டாடா ஏர்பஸ் விமான திட்டம் மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்துக்கு ஏன் மாற்றம்?ஆதித்யா தாக்கரே கேள்வி

By Pothy RajFirst Published Oct 28, 2022, 1:04 PM IST
Highlights

மகாராஷ்டிராவில் அமைக்கப்பட இருந்த ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான டாடா ஏர்பஸ் சி-295 விமானப் போக்குவரத்து திட்டம் ஏன் குஜராத்துக்கு மாற்றப்பட்டது என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிராவில் அமைக்கப்பட இருந்த ரூ.1.54 லட்சம் கோடி மதிப்பிலான டாடா ஏர்பஸ் சி-295 விமானப் போக்குவரத்து திட்டம் ஏன் குஜராத்துக்கு மாற்றப்பட்டது என்று உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

டாடா குழுமம், சி-295 எனும் சரக்கு விமானத்தை இந்திய விமானப்படைக்காக தயாரிக்க உள்ளது. இந்த திட்டம் உண்மையில், விதர்பா மண்டலத்தில் நாக்பூரில் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த திட்டம் திடீரென குஜராத் மாநிலம் வதோதராவுக்கு மாற்றப்பட்டது.

 இந்திய ராணுவத்துக்காக தனியார்நிறுவனம் முதல்முறையாக விமானம் தயாரிக்கிறது, இந்த திட்டத்துக்காக முதல் கட்டமாக ரூ.22ஆயிரம் கோடியை நேற்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. இந்த திட்டத்துக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுகிறார். 

இலவசம் என்பது வாக்களார்களை கவர்வதற்காகத்தான்: தேர்தல் ஆணையத்துக்கு பாஜக பதில்

இந்நிலையில் மகாராஷ்டிராவில் அமைக்கப்பட இருந்த டாடா ஏர்பஸ் விமான தயாரிப்புத் திட்டம் ஏன் குஜராத்துக்கு மாற்றப்பட்டது என்று சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, எதிர்க்கட்சித் தலைவர் அம்பாதாஸ் தான்வே கேள்வி எழுப்பியுள்ளனர். 

புனே மாவட்டத்தில் உள்ள ஷிரூர் பகுதிக்கு நேற்றுவந்த ஆதித்யா தாக்கரே நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் அமைக்கப்பட இருந்த டாடா ஏர்பஸ் விமான தொழிற்சாலைத் திட்டம் ஏன் குஜராத் சென்று குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்குமா. மகாராஷ்டிராவில் ஷிண்டே தலைமையிலான ஆட்சி வந்ததில் இருந்து மாநிலத்தில் இருந்து வெளியேறும் 4வது திட்டம்இதுவாகும். 

இரட்டை எஞ்சின் அரசு எனப் பெருமை கொள்கிறார்கள், ஆனால் மத்திய அரசின் ஒரு எஞ்சின் மட்டுமே வேலை செய்கிறது. மாநில அரசுஎஞ்சின் செயல்படாமல் இருக்கிறது.

ஜல் ஜீவன் மிஷன்: 100% குடிநீர் இணைப்பு வழங்கிய 7-வது மாநிலம் குஜராத்: தமிழகம் எந்த இடம் ?

கொரோனா பெருந்தொற்று காலத்தில்கூட மாநிலத்துக்கு முதலீட்டை ஈர்க்க எனது தந்தை உத்தவ்தாக்கரே பெரும் முயற்சி எடுத்தார். ஆனால் இந்தஅரசு தோல்வி அடைந்துவிட்டது. டெல்லிக்கு அடிக்கடி செல்லும் ஷிண்டே மாநிலத்தின் நலனுக்காகச் செல்லவில்லை, தன்னுடைய சுயநலத்துக்காகவே செல்கிறார். 

மகாராஷ்டிராவுக்குதான் டாடா ஏர்பஸ் திட்டம் வர வேண்டும் என்று ஷிண்டே கூறி நான் கேட்டது இல்லை. வேத்தாந்தாவின் பாக்ஸ்கான், பல்க் டர்க் பார்க், மெடிகல் டிவைஸ் பார்க், டாடா ஏர்பஸ் என 4 திட்டங்களும் மாநிலத்தைவிட்டு குஜராத்துக்கு சென்றுவிட்டன

பிரதமர் மோடி உண்மையான தேச பக்தர்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புகழாரம்

இந்த திட்டங்கள் பிற மாநிலங்களுக்குச் செல்லாமல் ஏன் குஜராத் மாநிலத்துக்கு மட்டும் மாற்றப்படுகின்றன, ஏன் மகாராஷ்டிராவில் இல்லை. புதிதாக வந்துள்ள அரசு புதிய திட்டங்கள் எதையும் மாநிலத்துக்கு கொண்டுவராதது ஏன்.  

கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மாநில முதல்வர்கள் பல தொழிலதிபர்கள் நிறுவனங்களுடன் பேசி முதலீட்டை ஈர்த்து வருகிறார்கள். ஏன் முதல்வர் ஷிண்டே பேசவில்லை. நம்முடைய முதல்வர் டெல்லிக்கு மட்டும் அடிக்கடி செல்கிறார், இது அவரின் நலனுக்காகத்தான், மாநிலத்தின் நலனுக்காக அல்ல.

இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்

click me!