உலக பக்கவாதம் தினம் 2023: பக்கவாதம் ஏற்பட என்ன காரணம்? அறிகுறிகள் என்னென்ன?

By Ramya s  |  First Published Oct 26, 2023, 1:51 PM IST

பக்கவாத அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்தில் அணுகுவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் அக்டோபர் 29 உலக பக்கவாதம் தினமாக அனுசரிக்கப்படுகிறது.


மூளை பக்கவாதம் ஒரு உலகளாவிய சுகாதார நெருக்கடியாக மாறி உள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் மில்லியன் கணக்கான உயிர்களை அச்சுறுத்தும் நோயாக இது மாறி உள்ளது. நாட்டில் இறப்புக்கான முதல் ஐந்து காரணங்களில் இது இடம் பெற்றுள்ளது. பக்கவாத அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவசர மருத்துவ சிகிச்சையை சரியான நேரத்தில் அணுகுவதன் முக்கியத்துவத்தை ஏற்படுத்தவும் அக்டோபர் 29 உலக பக்கவாதம் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த  சைலண்ட் கில்லர் நோயாக கருதப்படும், இந்த பக்கவாதம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Tap to resize

Latest Videos

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மூளை பக்கவாதத்தின் வகைகள்:

1. இஸ்கிமிக் ஸ்ட்ரோக்: இது மிகவும் பொதுவான வகையாகும். இது மூளைக்கு இரத்த ஓட்டத்தை தடுக்கிறது.. இஸ்கிமிக் பக்கவாதத்தால் கிட்டத்தட்ட 87% பேர் பாதிக்கப்படுகின்றனர்.

2. ரத்தக்கசிவு பக்கவாதம்: இந்த பக்கவாதம் மூளையில் உள்ள இரத்த நாளத்தின் சிதைவின் விளைவாக, மூளை திசுக்களில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது பொதுவான பக்கவாதமாக இல்லை என்றாலும், அவை மிகவும் கடுமையானவை மற்றும் பெரும்பாலும் அறுவை சிகிச்சை தலையீடு தேவைப்படுகிறது.

3. தற்காலிக இஸ்கிமிக் அட்டாக் (TIA): "மினி-ஸ்ட்ரோக்" என்றும் அழைக்கப்படும், சுருக்கமான, பக்கவாதம் போன்ற அறிகுறிகளைக் கொண்ட தற்காலிக பாதிப்பாகும். அவை எச்சரிக்கை அறிகுறிகளாக செயல்படுகின்றன மற்றும் புறக்கணிக்கப்படக்கூடாது.

அறிகுறிகள்:

  • திடீர் உணர்வின்மை அல்லது பலவீனம்: பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில், முகம், கை அல்லது கால்களை பாதிக்கும்.
  • பேசுவதில் அல்லது பேச்சைப் புரிந்துகொள்வதில் சிக்கல்: மந்தமான பேச்சு அல்லது மொழியைப் புரிந்துகொள்வதில் சிரமம்.
  • கடுமையான தலைவலி: குறிப்பாக ரத்தக்கசிவு 
  • பார்வை சிக்கல்கள்: திடீரென மங்கலான அல்லது கருமையாக பார்வை.
  • தலைச்சுற்றல் மற்றும் சமநிலை இழப்பு: நடைபயிற்சி அல்லது சமநிலையை பராமரிப்பதில் சிரமம்.
  • குழப்பம்: திடீர் மன குழப்ப நிலை.

அடிப்படை காரணங்கள்

  • உயர் இரத்த அழுத்தம் மூளை பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணம்.
  • ஒழுங்கற்ற இதயத் துடிப்பு இரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.
  • புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • நீரிழிவு நோய்  உயர் இரத்த சர்க்கரை அளவு இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
  • பக்கவாதத்தின் குடும்ப வரலாறு தனிப்பட்ட ஆபத்தை அதிகரிக்கும்.

வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்.. இந்த சூப்பர் உணவுகளை சேர்த்துக்கொண்டால் போதும்..

சமீபத்திய ஆண்டுகளில், பக்கவாதம் அதிகரித்து வருகிறது, குறிப்பாக இளம் வயதினர் பலரும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.. எனவே, விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வாழ்க்கை முறை மாற்றங்கள் ஊக்குவிக்கப்படுவதும், ஆரம்பகால மருத்துவத் தலையீடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதும் அவசியம்.

click me!