தக்காளியில் இந்த இரண்டு பொருள் மட்டும் கலந்தால் போதும்; நொடியில் முகம் பளபளக்கும்..!!

By Kalai Selvi  |  First Published Oct 25, 2023, 6:22 PM IST

பொலிவிழந்து காணப்படும் உங்கள் முகம் பளபளப்பாக மாற தக்காளியை கொண்டு இந்த ஃபேஸ் பேக் ட்ரை பண்ணி பாருங்கள்..


தற்போது மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்த வரிசையில், சரியான ஊட்டச்சத்து இல்லாமல் தோல் உயிரற்றதாகிவிடுகிறது. இதனால் பார்ப்பதற்கு அழகற்றதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி கம்ப்யூட்டர், லேப்டாப், மொபைல் போன்றவற்றின் முன் சில மணி நேரம் உட்காராமல் வேலை செய்வதும் முகத்தை பாதிக்கிறது. இதனால் முகம் பொலிவில்லாமல் இருக்கும். சரியான நேரமின்மையால் அழகு நிலையங்கள் அல்லது தோல் நிபுணர்களிடம் ஓடுகிறார்கள். இதைத் தவிர, வீட்டிலேயே இயற்கை வைத்தியங்களைப் பின்பற்றினால், உங்கள் சருமத்தை எந்த நேரத்திலும் பளபளப்பாக மாற்றலாம். இப்படி செய்வதால் பணமும் மிச்சமாகும். அந்த குறிப்புகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

Tap to resize

Latest Videos

undefined

உதவிக்குறிப்பு 1:
தக்காளி மற்றும் மஞ்சளில் சருமத்தைப் பாதுகாக்கும் நல்ல சத்துக்கள் உள்ளன. ஒரு பழுத்த தக்காளியை எடுத்து மிக்ஸியில் அரைக்கவும். அதில் சிறிது மஞ்சளைப் போட்டு நன்கு கலக்கவும். இந்த பேக்கை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். சிறிது நேரம் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். பிறகு மாய்ஸ்சரைசர் தடவவும். இவ்வாறு செய்வதால், சருமம் இறுக்கமாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

இதையும் படிங்க:  உங்கள் முகம் கண்ணாடி போல இருக்க இந்த பியூட்டி டிப்ஸ் பாலோ பண்ணுங்க...!!!

ஆனால் சிலருக்கு தக்காளி பிடிக்காது. இது ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த பேக் போடும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது. இந்த பேக்கை முதலில் கைகளில் தடவுவது நல்லது. ஒவ்வாமை, அரிப்பு அல்லது சொறி இல்லை என்றால், அதை முகத்திலும் தடவலாம்.

உதவிக்குறிப்பு 2:
ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது சர்க்கரையை எடுத்து தக்காளியை வட்டமாக நறுக்கவும். இப்போது பாதி தக்காளியை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து முகத்தில் மிகவும் மென்மையாக தடவவும். உங்கள் முகம், கால்கள் மற்றும் கைகளை இப்படி தேய்க்கவும். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள தூசி, அழுக்கு மற்றும் இறந்த செல்கள் நீங்கி.. சருமம் பளபளக்கும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், சருமத்தில் முன்னேற்றம் நிச்சயம். இந்த குறிப்பு யாருக்கும் பொருந்தும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!