பெண்கள் கவனிக்க வேண்டிய 5 பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள்..!

By Dinesh TGFirst Published Oct 14, 2022, 12:29 PM IST
Highlights

பெண்கள் தங்கள் உணவில் இருந்து அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவுகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதை பெறுவதற்கு முன்னர், பெண்களுக்கு மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உண்ணும் உணவுகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டால், அது ஒட்டுமொத்த உடலில் இயக்கத்தையும் பாதிக்கச் செய்துவிடும். இது தீவிரமான மருத்துவ நிலைமைகளை விடவும் அபாயமானது. ஒரு சில அடிப்படை ஊட்டச்சத்துகள் என்னதான் மருந்து மாத்திரைகளை திண்றாலும் கிடைக்காது. இப்படியொரு சிக்கல் ஏற்படாமல் தடுப்பதற்கு சமச்சீர் உணவை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் சிறப்பான உணவில் கூட, வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். உடலில் பாதிப்பு ஏற்பட்டால் சோர்வு, தலைசுற்றல், உணர்வின்மை, விரல்களில் கூச்ச உணர்வு, தசை பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றும். உடனடியாக மருத்துவரை அணுகாமல் விட்டால், நாள்பட்ட சுகாதார நிலைமைக்கு வழிவகுக்கும். குறிப்பாக பெண்கள் தங்கள் உணவில் இருந்து அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களையும் சரியான அளவுகளையும் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதை பெறுவதற்கு முன்னர், பெண்களுக்கு மிகவும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் உண்ணும் உணவுகள் பற்றி விரிவாக தெரிந்துகொள்வோம்.

இரும்புச் சத்து குறைபாடு

இரும்புச்சத்து குறைபாடு பெண்களிடையே மிகவும் அதிகமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் ஏற்படுகிறது. ஒருவேளை, நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டை ஈடுசெய்யத் தவறினால் ரத்த சோகை உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறிகளாக அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படுவது, தீவிர சோர்வு உருவாவது, மூச்சுத் திணறல், நாக்கில்  புண், உடையக்கூடிய நகங்கள் போன்ற பாதிப்புகளாக உடலில் ஏற்படும். கடல் உணவுகள், சிவப்பு இறைச்சி, பீன்ஸ், அடர்ந்த இலை கீரைகள், பட்டாணி, இரும்புச்சத்து நிறைந்த தானியங்கள் மற்றும் உலர்ந்த பழங்களான திராட்சை மற்றும் பாதாம் போன்றவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் இரும்புச்சத்தை மீட்டெடுக்கலாம்.

சுண்ணாம்புச் சத்து குறைபாடு 

உடலுக்கு ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக்க கால்ஷியம் உதவுகிறது. உடலில் குறைந்த அளவு கால்சியம் இருந்தால், அது ஆஸ்டியோபீனியா அபாயத்தை அதிகரிக்கலாம். ஆய்வுகளின் அடிப்படையில், 8-19 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறைந்த கால்சியம் அளவைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிர சோர்வு மற்றும் பலவீனம், அடிக்கடி தசைப்பிடிப்பு, தோல் பிரச்சினைகள், பலவீனமான எலும்புகள், பல் பிரச்சினைகள் மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்றவை கால்ஷியம் சத்து குறைபாட்டுக்கான முக்கிய அறிகுறிகளாகும். பால், தயிர், பாலாடைக்கட்டி, சோயாபீன்ஸ், கருமையான, இலை கீரைகள், மீன்கள் மற்றும் தானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் உடலில் கால்ஷியம் சத்து அதிகரிக்கும்.

ஃபோலேட் குறைபாடு

இதை வைட்டமின் பி-9 அல்லது ஃபோலிக் அமிலம் என்றும் குறிப்பிடலாம். இது உடலுக்கு சிவப்பு ரத்த அணுக்களை உருவாக்க உதவுகிறது. அதன்காரணமாக ஆரோக்கியமான செல் வளர்ச்சி மற்றும் செயல்பாடு உடலுக்கு கிடைக்கிறது. பெண்களுக்கு ஆரம்பகால கர்ப்ப காலத்தில் இது தேவையான ஊட்டச்சத்தாகும். இதனால் குழந்தைக்கு பிறப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்கும். த சோர்வு, சோம்பல், மூச்சுத் திணறல், தலைவலி, தலைச்சுற்றல், வெளிர் தோல் மற்றும் இதயத் துடிப்பு மாறுபாடு போன்றவை ஃபோலேட் குறைபாடுக்கான அறிகுறிகளாகும். கீரைகள், பீன்ஸ், பழங்கள், முழு தானியங்கள், கடல் உணவுகள், கல்லீரல், பாதாம் மற்றும் தானியங்கள் போன்றவை ஃபோலேட் குறைபாடு பிரச்னைக்கு தீர்வை தரும்.

குளிர்காலம் துவங்கிவிட்டால் குதிகால் வெடிப்பு பிரச்னையும் பின்னாடியே வந்துவிடும்- என்ன செய்யலாம்..??

அயோடின் குறைபாடு

தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், தைராய்டு ஹார்மோன்களின் தேவையான உற்பத்திக்கும் அயோடின் முக்கியமாகும். தைராய்டு மற்ற உடல் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அதேசமயத்தில், உடலுக்கு வளர்சிதை மாற்றத்தை நிர்வகிக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. உடலில் அயோடின் அளவு குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி பெரிதாகிவிடும். இது மருத்துவ பெயரில் கோயிட்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இதனால் உடல் எடை அதிகரிப்பு, உடல் பலவீனமாவது, சோர்வு ஏற்படுவது, முடி உதிர்வது, குளிர்காலங்களில் சில அசவுகரியங்கள் உள்ளிட்ட பிரச்னைகள் தோன்றும். மட்டி என்று அழைக்கப்படக்கூடிய ஷெல்ஃபிஷ், பால், உப்பு, முட்டை, கோழி, கடற்பாசி போன்ற உணவுகளில் அயோடின் சத்து நிறைந்துள்ளது. அதிகளவு தைராய்டு பிரச்னை கொண்டவர்கள் காலிஃபிளவர், முட்டைக்கோஸ், ப்ராக்கோலி மற்றும் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. 

உடலில் வைட்டமின் குறைப்பாட்டை எச்சரிக்கும் அசாதாரண அறிகுறிகள்..!!

வைட்டமின் பி12

நம் உடலுக்குத் தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12. இது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது மற்றும் நாம் உண்ணும் உணவுகளில் இருந்து மட்டுமே பெற முடியும். இது மூளை மற்றும் நரம்பு செல்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. மேலும் டிஎன்ஏ உற்பத்தியையும் எளிதாக்குகிறது. தோலில் வெளிர் மஞ்சள் நிறம், புண் மற்றும் சிவப்பு நாக்கு (குளோசிடிஸ்), வாய் புண்கள்,பார்வைக் குறைபாடு, எரிச்சல் மற்றும் மனச்சோர்வு ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டின் சில பொதுவான அறிகுறிகளாகும். பால், முட்டை, தயிர், கொழுப்பு நிறைந்த மீன்கள், சிவப்பு இறைச்சி, மட்டி மற்றும் செறிவூட்டப்பட்ட தானியங்கள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் வைட்டமி பி12 சத்து உடலுக்கு கிடைக்கும். 

click me!