சலூனில் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சை செய்த பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு.. அதிர்ச்சி சம்பவம்..

By Ramya sFirst Published Mar 29, 2024, 6:57 PM IST
Highlights

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சை செய்து கொண்ட 26 வயதான பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் சிகிச்சை செய்து கொண்ட 26 வயதான பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தி நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசினில் இதழில் இந்த சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சில முடி தயாரிப்பு பொருட்களால் ஏற்படும் ஆபத்து குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பல முறை சலூனில் தனது முடியை ஸ்ட்ரெயிட்டனிங் செய்ததாகவும் 

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, அந்த பெண் பல சந்தர்ப்பங்களில் சலூனில் முடி நேராக்க செயல்முறைகளை மேற்கொண்டார். கடந்த 2020 ஜூன் முதல் 2021, ஏப்ரல் வரை அவர் பல முறை இந்த சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு அமர்வுக்கு பிறகும் அந்த பெண்ணுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல், முதுகு வலியும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் ஹேர் ஸ்ட்ரெயிடனிங் சிகிச்சையின் போது உச்சந்தலையில் எரியும் உணர்வை அவர் உணர்ந்ததாகவும், இதனால் அவர் தலையில் புண்கள் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 

Health Tips : நீங்கள் ஒரு மாதம் முட்டை சாப்பிடவில்லை எனில் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?

இதை தொடர்ந்து அப்பெண் மருத்துவமனைக்கு சென்று  பரிசோதனை செய்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் இரத்தத்தில் அதிக அளவு கிரியேட்டினின் இருப்பதை மருத்துவர்கள் கவனித்தனர். பரிசோதனையில் பெண்ணின் இரத்தத்தில் கிரியேட்டினின் அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தபோது சிறுநீரகம் செயலிழந்ததை மருத்துவர்கள் கவனித்தனர். மேலும் அந்த பெண்ணின் சிறுநீரில் ரத்தம் இருப்பதாக அவர் கூறிய நிலையில் அவருக்கு சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இருப்பினும், ஸ்கேனில் தொற்று அல்லது சிறுநீரக அடைப்புக்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

இதை தொடர்ந்து அந்த பெண்ணிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, அவருக்கு ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் க்ரீமில் தோல் எரிச்சலை ஏற்படுத்தும் க்ளையாக்சிலிக் அமிலம் என்ற ரசாயனம் கலந்திருந்தது தெரியவந்தது. இந்த ரசாயனம் தோல் வழியாக சிறுநீரகங்களுக்குச் சென்றிருக்கலாம் என்று இது சிறுநீரக செயலிழப்பு வழிவகுத்தது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த பெண்ணின் சிறுநீரகக் குழாய்களில் கால்சியம் ஆக்சலேட் படிகங்கள் குவிந்து கிடப்பதால் ஏற்படும் ஒரு அரிய கோளாறான ஆக்சலேட் நெஃப்ரோபதியின் காரணமாக அந்தப் பெண் கடுமையான சிறுநீரகக் காயத்தை அனுபவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் மருந்தியல் இணைப் பேராசிரியரான டாக்டர் ஜோசுவா டேவிட் கிங் இதுகுறித்து பேசிய போது, " முடியை அழகுப்படுத்துதல் சிகிச்சையில் இந்த தயாரிப்புகளில் கிளைஆக்சிலிக் அமிலத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது நல்லது. உற்பத்தியாளர்கள் பாதுகாப்பான ஒன்றைக் கண்டறியுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று கூறினார்.

Beauty Tips : அடிக்கும் வெயிலில் முகம் பளபளக்க 'இந்த' ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்..!!

ஹேர் ஸ்ட்ரெய்டனிங் என்பது,  சுருள் முடியை மென்மையாகவும், நேராகவும் மாற்றும் செயல்முறையாகும். இதன் மூலம் ஒரு நேர்த்தியான தோற்றம் கிடைக்கிறது. முன்பெல்லாம் ஹீரோயின்கள் மட்டுமே முடிதிருத்த சிகிச்சைகளை செய்து வந்த நிலையில் தற்போது சாதாரண பெண்களும் இதுபோன்ற சிகிச்சைகளை செய்து வருகின்றனர். இந்த சூழலில், ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொண்ட பெண்ணுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்ட இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!