கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இளம்பெண் மரணம்.. அதன் அறிகுறிகள் என்ன? நோயை எப்படி தடுப்பது?

By Ramya sFirst Published Mar 19, 2024, 7:54 AM IST
Highlights

பிரிட்டனை சேர்ந்த 34 வயதான அனீலா ஹோக் என்ற பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்தார்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயானது உலகம் முழுவதும் பெண்களுக்கு பரவும் 4-வது பொதுவான புற்றுநோயாகும். 2022 ஆம் ஆண்டில் சுமார் 6,60,000 பெண்கள் இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3,50,000 பேர் உலகம் முழுவதும் பலியானதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.. இந்த நிலையில் பிரிட்டனை சேர்ந்த 34 வயதான அனீலா ஹோக் என்ற பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்தார்.

முதலில் அவருக்கு மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக இரத்தப்போக்கு இருந்துள்ளது., கீழ் முதுகுவலி மற்றும் கடுமையான வயிற்று அசௌகரியம் ஆகிய பிரச்சனைகளும் இருந்துள்ளது., ஆனால் மருத்துவர்கள் அவருக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்று மற்றும் நீரிழப்பு இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் இறுதியில், அவளுக்கு 4-ம் நிலை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது,தொடர்ந்து அவர், 19 மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அவருக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி மற்றும் இம்யூனோதெரபி ஆகியவை வழங்கப்பட்ட போதிலும், அவரது புற்றுநோய் பாதிப்பு குறையவே இல்லை. அவர் கடுமையான நீரிழப்பால் பாதிக்கப்பட்டிருந்ததால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிய சில மாதங்களுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டார். 

75 நாட்களில் 6,744 பேருக்கு அம்மை நோய் பாதிப்பு.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் என்றால் என்ன?

கருப்பை வாயில் உள்ள செல்கள் முன்கூட்டிய செல்களாக மாறத் தொடங்கும் போது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படுகிறது. அனைத்து முன்கூட்டிய உயிரணுக்களும் புற்றுநோயாக மாறாது, ஆனால் இந்த சிக்கலான செல்களைக் கண்டறிந்து அவற்றை மாற்றுவதற்கு முன் சிகிச்சையளிப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதில் முக்கியமானது.

கருப்பை வாய் புற்றுநோயில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஒன்று, ஸ்குவாமஸ் செல் கார்சினோமா, மற்றொன்று 
அடினோகார்சினோமாஸ் ஆகியவை ஆகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களில் சுமார் 80-90 சதவீதம் ஸ்குவாமஸ் செல் கார்சினோமாக்கள், அதே சமயம் 10-20 சதவீதம் அடினோகார்சினோமாக்கள் வகையால் ஏற்படுகின்றன.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அறிகுறிகள்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆரம்ப நிலைகள் பொதுவாக அறிகுறிகளை கண்டறிவது கடினம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் அறிகுறிகள் உருவாக பல ஆண்டுகள் ஆகும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனையின் போது அசாதாரண செல்களைக் கண்டறிவது கொடிய நோயைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழியாகும்.

பிறப்புறுப்பில் இருந்து  ரத்தம் வெளியேறுவது
உடலுறவு அல்லது மாதவிடாய்க்குப் பிறகு இரத்தப்போக்கு
மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட அதிக ரத்தப்போக்கு
கடினமான அல்லது வலிமிகுந்த சிறுநீர் கழித்தல்
வயிற்றுப்போக்கு
சோர்வு, எடை இழப்பு
பசியிழப்பு
மந்தமான முதுகுவலி அல்லது உங்கள் கால்களில் வீக்கம்
இடுப்பு மற்றும் வயிற்று வலி

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

நிபுணர்களின் கூற்றுப்படி, பெரும்பாலான கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படுகின்றன இது பாலியல் ரீதியாக பரவும் தொற்றாகும். HPV பாலியல் தொடர்பு மூலம் பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் HPV வைரஸால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்களின் உடல்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் அதை உணர மாட்டார்கள். இருப்பினும், உங்கள் உடல் தொற்றுநோயை எதிர்த்துப் போராடவில்லை என்றால், அது உங்கள் கருப்பை வாயின் செல்களை புற்றுநோய் செல்களாக மாற்றும்.

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் ஆபத்து யாருக்கு உள்ளது?

HPV தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் நோய் கொண்டவர்கள், புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், ஹெச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பிறப்பு கட்டுப்பாடு மாத்திரைகள் எடுத்துக் கொண்டவர்கள், பல குழந்தைகளைப் பெற்றவர்கள், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் ஆகியோர் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படலாம். 

அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்... காரணம் என்ன தெரியுமா..? தடுக்க சில வழிகள் இங்கே..

எப்படி தடுப்பது?

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க HPV தடுப்பூசி மிகவும் நன்றாக வேலை செய்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் அதிகமான HPV-க்குக் காரணமான புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. HPV தடுப்பூசி முதன்முதலில் 2006 இல் பரிந்துரைக்கப்பட்டதிலிருந்து, பெரும்பாலான HPV புற்றுநோய்கள் மற்றும் பிறப்புறுப்பு மருக்களை ஏற்படுத்தும் HPV வகைகளின் தொற்றுகள் டீன் ஏஜ் பெண்களிடையே 88 சதவீதமும், இளம் வயது பெண்களிடையே 81 சதவீதமும் குறைந்துள்ளன.
 

click me!