
ஆண்களுக்கு அழகு என்றாலே அவர்களது தாடியும், மீசையும் தான். பெண்கள் நீளமான மற்றும் அடர்த்தியான முடி வேண்டும் என்று எப்படி விரும்புகிறார்களோ, அதுமாதிரி தான் ஆண்களும் தாடி, மீசையையும் விரும்புகிறார்கள். தலையில் முடி இல்லை, வழுக்கையாக இருக்கிறது என்ற பிரச்சனையை பல ஆண்கள் எதிர் கொண்டாலும். மீசை, தாடி வளரவில்லையே என்ற கவலை தான் பெரும்பாலான ஆண்களிடம் உள்ளன. ஏனெனில், இவை இரண்டும் அவர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
இந்த நவீன காலத்தில் இதை பலரும் நம்புகிறார்கள். அதனால்தான் ஒரு ஆணிற்கு மீசை மற்றும் தாடி வளரவில்லை என்றால் அவருக்கு ஏதோ ஒரு பெரிய குறை இருப்பதாக கருதப்படுகிறது. நீங்களும் இதே பிரச்சினையை எதிர்கொள்கிறீர்களா? உண்மையில் இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் தவிக்கிறீர்களா? உங்களுக்கான பதிவு தான் இது. ஆம், ஒரு சில ஆண்களுக்கு மட்டும் ஏன் மீசை, தாடி வளரவில்லை? அதற்கான உண்மையான காரணம் என்ன? இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சில ஆண்களுக்கு தாடி, மீசை வளராததற்கான காரணங்கள் :
1. பெண்களைப் போலவே ஆண்களும் பருவமடைவார்கள். ஆனால் அவர்களின் உடலில் ஒரு சில மாற்றங்கள் தோன்றும். அது பருவமடைவதலின் அறிகுறியாகும். அவற்றில் ஒன்றுதான் தாடி மற்றும் மீசை. ஒருவேளை ஆண்களுக்கு குறிப்பிட்ட வயது கடந்த பிறகும் தாடி, மீசை வளரவில்லை என்றால் அவர்களது உடலில் சில குறைபாடுகள் உள்ளது என்று அர்த்தம்.
2. டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்பது ஆண்களின் உடலில் மிக முக்கியமான ஹார்மோன் ஆகும். இது ஆண் பருவமடையும் காலம் முதல் அதிகமாக சுரக்கும் இந்த ஹார்மோன் சரியாக சுவைக்கவில்லை என்றால் உடல் மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படும். மேலும் மீசை மற்றும் முடி வளர்ச்சியும் நின்றுவிடும்.
3. ஹைபோகோணடிசம் (Hypogonadism) குறைபாட்டின் காரணங்களால் மீசை தாடி மற்றும் உடலின் மற்ற முடிகளும் வளராது.
4. அதிகமான அழுத்தம் ஆரோக்கியத்தை மட்டுமல்லாமல், மீசை மற்றும் தாடி வளருவதிலும் தலையீடும்.
5. மது அருந்துதல் புகைப்பிடித்தல் உடலை பாதிக்கும் இன்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பழக்கம் மீசை மற்றும் தாடியின் வளர்ச்சியையும் தடுக்கும்.
6. நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் கட்டாயம் உங்களது ஆரோக்கியம் பாதிக்கப்படுவதும். மீசை மற்றும் தாடி வளராததுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணம் என்று பல ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன.
7. ஆண்கள் தங்களது உடல் உழைப்புக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவை சாப்பிடாவிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும் இதன் தாக்கம் ஹார்மோனை சீர் கெடுத்து விடும். இதன் விளைவாக மீசை மற்றும் தாடி வளராமல் போகும்.
தீர்வு உண்டா?
உங்களுக்கு மீசை மற்றும் தாடி வளர வேண்டும் என்று நினைத்தால் முதலில் ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக சாப்பிடுங்கள். அதுபோல உங்களுக்கு ஹார்மோன் குறைபாடு பிரச்சனை இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.