Moringa Leaves Powder : காலைல 1 ஸ்பூன் முருங்கை இலை பொடி.. இரும்புச்சத்து தவிரவும் நிறைய சத்து இருக்கு

Published : Jul 25, 2025, 09:15 AM IST
Moringa Leaves Benefits

சுருக்கம்

தினமும் ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடியை காலையில் உண்பதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. அவை குறித்து இங்கு காணலாம்.

முருங்கை இலையில் இரும்புச்சத்து இருப்பதை நாம் அறிவோம். இது தவிர வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 உள்ளிட்ட உயிர் சத்துகளும், பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் காணப்படுகின்றன.

பல நோய்களை வருமுன் காக்க முருங்கை இலை உதவுகிறது. முருங்கை மரத்தில் உள்ள அதன் இலைகள் மட்டுமின்றி, காம்பு, பூக்கள், பட்டை, முருங்கை பிசின், முருங்கைக்காய் முருங்கை விதை என அனைத்துமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இதில் முருங்கை இலையின் பொடியை தினசரி உண்பதால் கிடைக்கும் எக்கச்சக்கமான நன்மைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

முருங்கை இலை பொடி​ தயாரிப்பது எப்படி?

முருங்கை இலைகளை அதனுடைய காம்பை நீக்கி இலைகளை மட்டும் நிழலில் காய வைக்க வேண்டும். இவை நன்றாக காய்ந்த பின் மிக்ஸியில் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளலாம். மீண்டும் இதை வெயில்படாமல் உலர வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி நிழலிலேயே காயவிட்டு தயார் செய்த முருங்கை இலை பொடியை இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்க வேண்டும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

முருங்கை இலை பொடியை சூடான வெந்நீரில் கலந்து காபி அல்லது டீக்கு பதிலாக அருந்தலாம். அப்படி செய்ய விரும்பாதவர்கள் முருங்கை இலை பொடியுடன் தேன் கலந்து உண்ணலாம். வெறும் தண்ணீரில் அல்லது மோரில் முருங்கை இலை பொடியை கலந்து குடிக்கலாம்.

முருங்கை இலை பொடியின் நன்மைகள்

  1. ஆற்றல் பெட்டகம்

நீங்கள் தினமும் முருங்கை இலை பொடியை உண்பதால் உங்களுடைய உடல் ஆற்றல் அதிகரிப்பதை உணர முடியும். காலையில் காபி அல்லது டீ குடிப்பதற்கு பதிலாக முருங்கை இலை பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். இதனால் அதிக ஆற்றலை பெற முடியும். இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் செயல்முறைக்கு உதவுகிறது. உடல் சோர்வை தடுத்து சுறுசுறுப்பாக வைக்கும்.

2. புற்றுநோய் தடுப்பு

முருங்கை இலையில் காணப்படும் உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் புற்றுநோய்க்கு எதிராக போராட உதவுகிறது. இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், பீனாலிக்ஸ், கரோட்டினாய்டுகள், அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடும். நாள்பட்ட நோய்களான இதய நோய், நீரிழிவு நோய், புற்றுநோய்களை தடுக்க உதவும்.

3. செரிமானம் மேம்படும்

முருங்கை இலை பொடி செரிமானத்தை தூண்டும். குடல் நுண்ணுயிரிகளை ஆதரிப்பதால் குடல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. வயிற்று வீக்கத்தைக் குறைக்கும். தயிர் அல்லது தண்ணீரில் ஒரு டீஸ்பூன் முருங்கை இலை பொடி போட்டு குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் வரவே வராது.

4. கல்லீரல் ஆரோக்கியம்:

முருங்கை இலை காணப்படும் சேர்மங்கள் கல்லீரல் செல்களை பாதுகாக்கிறது. இதில் படியும் கொழுப்பைக் குறைத்து, கொழுப்பை உடைக்கும் புரதங்களுடைய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

5. சரும ஆரோக்கியம்

முருங்கை இலை பொடியில் காணப்படும் வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் போன்ற ஆக்சிஜனேற்றிகள் வயதான தோற்றத்திற்கு எதிராக செயல்படுகிறது. தினமும் ஒரு ஸ்பூன் முருங்கை இலை பொடியை சாப்பிடுவதால் சரும ஆரோக்கியம் மேம்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க