
கொரிய சரும பராமரிப்பில் ஃபேஸ் ஷீட் மாஸ்குகள் (face sheet masks) முக்கிய பங்கு வகிக்கிறது. இது பலவிதமான சரும பிரச்சனைகளை மிக எளிதில் நிவர்த்தி செய்துவிடும். இந்த ஷீட் மாஸ்குகள் சீரம்களில் நனைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதால், அவை சருமத்திற்கு தேவையான ஹைட்ரஜனை வழங்கும். அதுமட்டுமின்றி, சருமத்தில் தெரியும். வயதான அறிகுறிகளை குறைக்கும் மற்றும் சருமத்தில் இருக்கும் பல சரும பிரச்சினைகளையும் சமாளிக்க உதவுகிறது.
ஆனாலும், எல்லாவிதமான ஷீட் மாஸ்குகளும் ஒரே மாதிரி சமமாக உருவாக்கப்படுவதில்லை. எனவே நீங்கள் ஷீட் மாஸ்க் பயன்படுத்த விரும்பினால் உங்களது சரும வகைக்கு ஏற்ப அந்த ஷீட் மாஸ்க்களில் சரும பராமரிப்பு பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே அதை படித்து உங்களது சருமத்திற்கு ஏற்ப சரியான ஷீட் மாஸ்க்கை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் நல்லது. சரி இப்போது உங்களது சருமத்திற்கு ஏற்ற சரியான ஷீட் மாத்திரை தேர்வு செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
வறண்ட சருமம் உள்ளவர்கள்
உங்களுக்கு வறண்ட சருமம் இருந்தால் சருமத்தை ஈரப்பதமாக வைக்க ஹைலூரோனிக் ஆசிட் மற்றும் கிளிசரின் கொண்ட ஷீட் மாஸ்குகளை பயன்படுத்துங்கள். இவை உங்களது சருமத்தை ஈரப்பதமாக தக்க வைக்கும் மற்றும் மென்மையாக மாற்றும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்கள்
உங்களது முகத்தில் அதிகப்படியான எண்ணெய் வழிக்கிறது என்றால் நீங்கள் சார்கோல் அல்லது கிளே ஷீட் மாஸ்குகளை முயற்சி செய்யலாம். இவை சருமத்தை சேதப்படுத்தாமல் சுத்தம் செய்யும்.
சென்சிட்டிவ் ஸ்கின்
உங்களது சருமம் ரொம்பவே சென்சிடிவ் என்றால் நீங்கள் கற்றாழை, கிரீன் டீ, கெமோமில், காலெண்டுலா போன்ற ஷீட் மாஸ்க்குகளை தேர்வு செய்யலாம். முக்கியமாக கடுமையான ரசாயனங்கள் வாசனை திரவியங்கள் கொண்ட தயாரிப்புகளை சருமத்தில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சீரற்ற சருமம் உள்ளவர்கள்
உங்களது சருமம் சீரற்றதாக இருந்தால் வைட்டமின் சி மற்றும் நியாசினமைட் கொண்ட ஷீட் மாஸ்க்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த ஷீட் மாஸ்குகள் மந்தமான உங்களது சருமத்தை பிரகாசமாகும் மற்றும் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை குறைக்கும்.
முதிர் சருமம் உள்ளவர்கள்
உங்களது சருமம் ரொம்பவே முதிர்ச்சியாக இருக்கிறதா? அப்படியானால் வயதான அறிகுறிகளை தடுக்க அல்லது குறைக்க கொலாஜன், ரெட்டினோல் மற்றும் பெப்டைட்ஸ் போன்ற பொருட்கள் அடங்கிய ஷீட் மாஸ்குகளை வாங்கி பயன்படுத்துங்கள். இதை உங்களை இளமையாக வைக்க உதவும்.
முகப்பரு சருமத்திற்கு
உங்களது முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கிறது என்றால் டீ ட்ரீ ஆயில், சாலிசிலிக் ஆசிட் போன்ற பொருட்கள் அடங்கிய ஷீட் மாஸ்க்களை பயன்படுத்துங்கள். இவை சரும வெடிப்பை எதிர்த்து போராடும் மற்றும் வீக்கத்தை தணிக்கும்.