
இதற்காக பலரும் பல்வேறு விதமான பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் வீட்டில் கிடைக்கும் சில விஷயங்களை குறிப்பாக இயற்கையானதை நாம் மறந்து விடுகிறோம். முல்தானி மட்டியும் அப்படிப்பட்ட ஒன்றாகும். ஆம், முல்தானி மட்டி சருமத்தை ஆழமாக சுத்தம் செய்து பிரகாசமாக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி இறந்த சரும செல்களை அகற்ற உதவும். அதுமட்டுமில்லாமல் முல்தானி மட்டி சருமத்தின் நிறத்தை மாற்றவும், முகப்பருவை நீக்கவும் உதவுகிறது.
எந்த பார்லருக்கும் செல்லாமலேயே முல்தானி மட்டிக் கொண்டு உங்களது முகத்தை பளபளப்பாக வைக்கலாம் தெரியுமா? இதற்கு முல்தானி மட்டியுடன் சில இயற்கை பொருட்களும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை உங்களது முகத்தை மேலும் பொலிவுடன் வைக்க உதவும். முல்தானி மட்டிக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஃபேஸ் பேக் உங்களது முகத்தை அழகாக மாற்ற உதவும். சரி இப்போது முல்தானி மட்டி ஃபேஸ் பேக் எப்படி செய்வது? அதனுடன் என்னென்ன பொருட்களை சேர்க்க வேண்டும என்பதைக் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முல்தானி மட்டி ஃபேஸ் பேக் :
தேவையான பொருட்கள்
முல்தானி மட்டி - 2 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 3 ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 ஸ்பூன்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் - 1
தயாரிக்கும் முறை :
ஒரு கிண்ணத்தில் மேலே சொன்ன அனைத்து பொருட்களையும் ஒவ்வொன்றாக சேர்ந்து நன்றாக கலக்கவும். பிறகு இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் காய வைக்கவும். முகம் நன்றாக காய்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம்.
முல்தானி மட்டி ஃபேஸ் பேக் நன்மைகள் :
முல்தானி மெட்டி சற்று ஓட்டும் தன்மை மற்றும் எண்ணெய் பசையுடன் இருக்கும். அரிசி மாவை இதனுடன் சேர்க்கும்போது அவை உங்களது முகத்தில் ஒரு ஸ்க்ரப் போல செயல்படும். இதனால் முகத்தில் துளைகள் சுத்தம் செய்யவும், இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது.