கோடையில் ரத்த சக்கரை அளவை கட்டுக்குள் வைக்க இதைச் செய்யுங்க..!!

By Asianet TamilFirst Published Mar 22, 2023, 4:50 PM IST
Highlights

அதிக நார்ச்சத்துள்ள உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் உடலில் சக்கரை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது. இதுபோன்ற உணவுகள் உடல் எடையை குறைக்கவும் பெரிதும் உதவுகின்றன.
 

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது, வயதுக்கு ஏற்ப எடையை பராமரிப்பது போன்றவற்றால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். காலநிலை மாற்றத்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பாதிப்பது இயற்கையானது. நோயெதிர்ப்பு அமைப்பு, நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உடலின் வழிமுறை, கணையத்தில் உள்ள இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களைத் தாக்கி அழிக்கும்போது டைப் 1 நீரிழிவு ஏற்படுகிறது. 

சர்க்கரை நோயாளிகள் கோடையில் அதிக சோர்வை உணர்கிறார்கள். இது வியர்வை சுரப்பிகளை பாதிக்கிறது. இதனால் உடலில் இருந்து விரைவாக  தண்ணீர் இழப்பு ஏற்பட்டுவிடும். ஏனெனில் அதிக சர்க்கரை அளவு ஒரு நபருக்கு அதிக சிறுநீர் கழிக்க காரணமாகிறது. இதனால் விரைவாக அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுவிடும். வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தேவையான இன்சுலின் அளவைக் கண்டறிய, அவர்களுடைய ரத்த சர்க்கரையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 

நீரிழிவு நோயில்டைப் 1 மற்றும் டைப் 2 என  இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. வகை 1 நீரிழிவு நோயில், கணையம் இன்சுலினை உற்பத்தி செய்யாது. ஏனென்றால், உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு இன்சுலினை உருவாக்கும் கணையத்தில் உள்ள ஐலெட் செல்களைத் தாக்குகிறது. இதனால் எதிர்ப்பு சக்தி கிடைக்காது. வகை 2 நீரிழிவு நோயில், கணையம் இயல்பான அளவை விடவும் குறைவான இன்சுலினை உற்பத்தி செய்யும். இன்சுலின் எதிர்ப்பு சக்தியை உடல் பெறுகிறது.சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்த தங்கள் வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுறுத்தலாக உள்ளது.

நடைப்பயிற்சி

கோடையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி ஒரு முக்கியமான வழியாகும். தினமும் காலையிலும் மாலையிலும் 30 நிமிடங்கள் நடக்க முயற்சி செய்யுங்கள். உணவுக்கு 1-3 மணி நேரம் கழித்து லேசான உடற்பயிற்சியும் ரத்த சக்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவும். 

நார்ச்சத்தான உணவு

அதிக நார்ச்சத்துள்ள உணவு நீரிழிவு நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன. நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. இத்தகைய உணவுகள் உடல் எடையை குறைக்க உதவும். அதே நேரத்தில் உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கவும் நார்ச்சத்து உதவுகிறது. 

நார்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஓட்ஸ், பழுப்பு அரிசி, முழு தானியங்கள், பழங்கள், விதைகள், கொட்டைகள், கேரட் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகள் அடங்கும்.

பழச்சாறு

கோடைக் காலத்தில் பெரும்பாலான மக்கள் பழச்சாறுகள் மற்றும் ஸ்மூத்தி போன்றவற்றை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் நீரிழிவு நோயாளிகள், நார்ச்சத்து அதிகம் இல்லாத பழங்களை சாப்பிடக் கூடாது. இதனால் உடலில் இயற்கையான கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள பழச்சாறுகள் குளுக்கோஸ் அளவை மிக விரைவாக உயர்த்திவிடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். 

செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி வரை- நெல்லிக்காயின் ஆரோக்கிய நன்மைகள்...!!

தண்ணீர்

தண்ணீர் குடிப்பது உடலில் சர்க்கரையை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே, கோடை காலத்தில் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு வகையில் நன்மையை தருகிறது. 

அடிக்கடி பரிசோதனை

டைப் 1 அல்லது டைப் 2 என எந்தவிதமான நீரிழிவு நோய் இருந்தாலும், அதை சரிவர நிர்வகிப்பது மிகவும் முக்கியம். அதற்கு நீங்கள் அடிக்கடி ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாதம் ஒருமுறை என்கிற கணக்கில் பரிசோதித்து வருவது நன்மையை தரும். மேலும், உடலும் வலு பெறும். 
 

click me!