வீட்ல இருக்குற 2 பொருள் வைத்து இப்படி பிங்கர் ஃபிரைஸ் செய்து குட்டிஸ்களுக்கு கொடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 22, 2023, 3:26 PM IST

குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடும் இதனை வீட்டுல இருக்குற 2 பொருளை வைத்து ஈஸியான ,சிம்பிளான, க்ரிஸ்பியாயான, ஹெல்த்தியான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இன்று நாம் காண உள்ளோம்


பள்ளி முடித்து சோர்ந்து வரும் குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் விதத்தில் ஒரு டேஸ்ட்டான க்ரிஸ்பியான ஸ்னாக்ஸ் வகையை தான் இன்று நாம் காண உள்ளோம்.

இதனை குழந்தைகள் மிகவும் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். வீட்டுல இருக்குற 2 பொருளை வைத்து ஈஸியான ,சிம்பிளான, க்ரிஸ்பியாயான., ஹெல்த்தியான ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ் தான் இன்று நாம் காண உள்ளோம்.


இது வழக்கமாக நாம் சாப்பிடும் வடை, போண்டா, புட்டு, கொழுக்கட்டை போன்ற ஸ்னாக்ஸ் வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட சுவையில் சூப்பராக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
கெட்டி அவல் - 1 கப்
கடலை மாவு-1/2 கப் (அல்லது பொரிகடலை மாவு )
சீரகம்-1/4 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1 /4 ஸ்பூன்
கரம் மசாலா-1/2 ஸ்பூன்
மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-சிறிது
உப்பு-தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு


Summer Tips : கொளுத்தும் வெயிலிலும் வீடு ஜில்லுன்னு இருக்கனுமா?ஏசி எல்லாம் வேண்டாங்க!ஈஸியா இத பண்ணுங்க போதும்!

செய்முறை:

ஒரு பௌலில் அவல் சேர்த்து தண்ணீர் ஊற்றி, இரு முறை கழுவிக் கொண்டு பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் கடலை மாவு சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து லேசாக கடலை மாவை லேசாக 3 சுமார் நிமிடங்கள் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். அலசி வைத்துள்ள அவல் பௌலில் வறுத்து வைத்துள்ள கடலை மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் சீரகம்,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதனை எண்ணெய்யோடு கடலை மாவில் சேர்த்து அதில் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Latest Videos

இப்போது கையில் சிறிது எண்ணெய் தடவி பிசைந்த இந்த கலவையை சிறிது எடுத்து அதனை ரோல் போன்று செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லா மாவினையும் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் இந்த ரோல்களை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நன்றாக பொரித்து எடுத்தால் க்ரிஸ்பியான , டேஸ்ட்டான ஸ்னாக்ஸ் ரெடி! இதனை டொமேட்டோ கெட்சப்புடன் தொட்டு சாப்பிட்டால் ஒன்று கூட மிச்சம் இருக்காது. 

click me!