உகாதி 2023- நாளை இந்த பச்சடியை செய்து உகாதியை குடும்பத்துடன் கொண்டாடுங்கள்!

By Asianet Tamil  |  First Published Mar 21, 2023, 6:53 PM IST

வாருங்கள்! அறுசுவையும் கொண்ட உகாதி ஸ்பெஷல் பச்சடியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


உகாதி என்பது தென் இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கான மாட்ரிம் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் புத்தாண்டு தினத்தை தான் உகாதியாக வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள்.

இந்நன்னாளில் கடவுளுக்கு படைக்க செய்யப்படும் உணவுகளில் மிக முக்கியமான ஒன்று என்றால் அது உகாதி பச்சடி. இந்த உகாதி பச்சடியில் புளிப்பு,
துவர்ப்பு,
கசப்பு,
இனிப்பு,
கார்ப்பு
மற்றும்
உவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளை சேர்த்து செய்யப்படும் ஒரு ரெசிபி ஆகும். சேர்க்கப்பட்டு செய்யப்படுகிறது.

இந்த உகாதி ஸ்பெஷல் பச்சடியை நீங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா? அப்போ இந்த பதிவை பார்த்து முயற்சித்து பாருங்கள். இதனை செய்வது மிக மிக சுலபமாக இருப்பதால் குறைந்த நேரத்தில் சட்டென்று செய்து விடலாம்.

வாருங்கள்! அறுசுவையும் கொண்ட உகாதி ஸ்பெஷல் பச்சடியை வீட்டில் எளிமையாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

உகாதி பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:

வெல்லம்- 1 ஸ்பூன் (இனிப்பு)
வேப்பம்பூ - 1 ஸ்பூன் (கசப்பு)
புளி - லெமன் சைஸ் (புளிப்பு)
பச்சை மாங்காய் - 1 ஸ்பூன் (துவர்ப்பு)
மிளகுத் தூள் - 1/4 ஸ்பூன் (கார்ப்பு)
உப்பு - தேவையான அளவு (உவர்ப்பு)
தண்ணீர்-1 கப்

உகாதி பச்சடி செய்வது எப்படி:

முதலில் மாங்காயை அலசி விட்டு தோல் சீவி ஒரே அளவிலான சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு அதனை 1 ஸ்பூன் அளவிற்கு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் புளியை ஒரு சின்ன கிண்ணத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சின்ன கிண்ணத்தில் வெள்ளம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி , அதில் புளி கரைசல் மற்றும் அரிந்து வைத்துள்ள மாங்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தாக அதில் சிறிது வேப்பம் பூ மற்றும் மிளகுத் தூள் தூவ வேண்டும். 

இறுதியாக உப்பு தூவி நன்றாக கிளறினால் உகாதி ஸ்பெஷல் பச்சடி ரெடி! இந்த பச்சடியுடன் தேங்காய்,பழம், வெற்றிலை, பூ, கரும்பு மற்றும் ஏதேனும் ஒரு உணவு வகையை வைத்து தெய்வத்திற்கு படைத்து பின் அதனை நெய்வேத்தியமாக அனைவருக்கும் வழங்கலாம். இந்த உகாதியில் இதனை உங்கள் கைகளால் செய்து படைத்து வழிபட்டு கடவுளின் அனுகிரஹத்துடன் வாழ்வில் வளமோடு வாழுங்கள்! உகாதியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்!

Latest Videos

click me!