கொத்தவரங்காய் பருப்பு உசிலியை இப்படி செய்து கொடுத்தால் பிடிக்காது என்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள்.

By Asianet Tamil  |  First Published Mar 20, 2023, 12:17 PM IST

வாருங்கள்! அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தவரங்காய் பருப்பு உசிலி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவகளில் அதிகளவு காய்கறிகளை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமாகும். பொதுவாக ஒரு சில காய்கறிகளையே மீண்டும் மீண்டும் சமைத்து சாப்பிடுவோம். ஒரு சில காய்கறிகளை மறந்தது மறந்து அல்லது விரும்பி சமைக்காமல் இருப்போம். அப்படி மறந்து அல்லது அனைவராலும் விரும்பி சாப்பிட மறக்கும் காய்கறிகளுள் ஒன்றான கொத்தவரங்காய் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். இதனை ஒரு முறை செய்து கொடுங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள், குறிப்பாக குட்டிஸ்கள் இதனை விரும்பி சாப்பிடும் அளவிற்கு இதன் சுவை அட்டகாசமாக இருக்கும்.

வாருங்கள்! அனைவரும் விரும்பி சாப்பிடும் கொத்தவரங்காய் பருப்பு உசிலி ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

கொத்தவரங்காய்- 1 கப்
காய்ந்த மிளகாய்- 5
பாசிப்பருப்பு - 4 ஸ்பூன்
துவரம் பருப்பு- 1/2 கப்
கடலைப்பருப்பு- 1/4கப்
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு

தாளிப்பதற்கு:

கடுகு - 2 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை-1 கொத்து

கோடைக்காலத்தில் நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா !

செய்முறை:

முதலில் கொத்தவரங்காயை அலசி விட்டு ஓரே அளவிலான சிறு துண்டுகளாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில் அனைத்து பருப்புகளையும் சேர்த்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.நன்றாக ஊறிய பிறகு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து கொர கொரவென அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் அரிந்து வைத்துள்ள கொத்தவரங்காயைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, உப்பு தூவி தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு விழுதை சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும். வெந்த பிறகு, அதனை ஆற வைத்துக் கட்டிகள் இல்லாமல் உதிர்த்து எடுத்துக் வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த பின் அதில் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். இப்போது வேக வைத்து எடுத்துள்ள கொத்தவரங்காயை தண்ணீர் இல்லாமல் பிழிந்து கடாயில் சேர்த்து,சிறிது மஞ்சள் தூள் தூவி அதனுடன் உதிர்த்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்துக் கிளறி விட்டால் அட்டகசமான கொத்தவரங்காய் பருப்பு உசிலி ரெடி! சாம்பார் சாதம் தயிர் சாதம் ,ரசம் சாதம் என்று அனைத்து விதமான சாதத்திற்கும் ஒரு சூப்பரான சைட் டிஷ்ஷாக இருக்கும் இதனை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க!

Latest Videos

click me!