Walking: எடை குறைப்பு சீக்ரெட்: தினசரி 10,000 அடிகள் நடக்க வேண்டுமா?

By Dinesh TGFirst Published Oct 21, 2022, 11:43 PM IST
Highlights

ஒவ்வொருவரும் தினசரி 10,000 அடி எடுத்து வைத்தால், உடல் இரும்பு மாதிரி வலிமையாகும் என கூறப்படுகிறது. 

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைக்கும் இளைஞர்கள் முதல் நோய்கள் தங்களை நெருங்க கூடாது என நினைப்பவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற முதல் உடற்பயிற்சி எதுவென்றால் நடைபயிற்சி தான். நமது உடலுக்கு நடைபயிற்சி மிக சிறந்த ஒன்றாகும். ஒவ்வொருவரும் தினசரி 10,000 அடி எடுத்து வைத்தால், உடல் இரும்பு மாதிரி வலிமையாகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு நடைபயிற்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நடைபயிற்சி பற்றிய ஆய்வு முடிவுகள்

நடைபயிற்சி மேற்கொள்வது நீரிழிவு நோயைத் தடுக்குமா? என்ற கேள்விக்கான பதிலை நேச்சர் ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வில், தினசரி 8,600 அடிகள் எடுத்து வைப்பது உடல் எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது என குறிப்பிட்டுள்ளது. அதிக உடல் எடை கொண்ட பெரியவர்கள் ஒரு நாளைக்கு 11,000 அடிகள் நடந்தால், உடல் பருமனாக மாறுவதற்கான வாய்ப்புகளை பாதியாக குறைக்கலாம் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், 4 வருடங்களாக 6,000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுதவிர மனச்சோர்வு, நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிற பிரச்சனைகளைத் தடுக்கவும் நடைபயிற்சி உதவுகிறது என பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையில், நீரிழிவு நோய் பிரச்சனைக்கும் நடைபயிற்சி அருமருந்தாக அமைகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

Mudakathan Spinach: மூட்டு வலியை உடனே போக்கும் இந்த தோசையை இன்றே செய்து சாப்பிடுங்கள்!

தினசரி 10,000 அடிகள்

நீரிழிவு மருத்துவர் அனில் போராஸ்கர் தெரிவிக்கையில், ”நீங்கள் எதை சாப்பிடுகிறீர்களோ அது சக்தியாக மாற்றப்பட்டு, உடலால் பயன்படுத்தப்படுகிறது. அதிகளவிலான கலோரிகள் கொழுப்பாக மாறுகிறது. இளைஞர்களுக்கு தினந்தோறும் 1,600 கலோரிகளும், இளம் குழந்தைகளுக்கு 2,000 கலோரிகளும் தேவைப்படுகின்றன. உடல் பருமன் என்பது இதய நோய்கள், நீரிழிவு மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் ஓர் முக்கிய ஆபத்து காரணியாகும். ஆகையால் நடைபயிற்சி மேற்கொள்வது தான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு வழியாகும். “ஒரு நாளைக்கு எத்தனை அடி நடக்க வேண்டும் என்பதை முடிவெடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் 1,000 அடிகள் வீதம் என அதிகரித்து கொண்டே இருங்கள். தினசரி குறைந்தது 10 ஆயிரம் அடியாவது எடுத்து வையுங்கள்” என்றார்.

Sleeping: மதிய உணவுக்குப் பின் தூங்குபவரா நீங்கள்? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!

மற்றொரு மருத்துவர் ஜெயின் கூறுகையில், “பிப்ரவரி 2013 ஆம் ஆண்டில் வெளியான நீரிழிவு நோய்த் தொடர்பான ஒரு ஆய்வில், தொடர்ச்சியான மிதமான நடைபயிற்சி, உடற்பயிற்சியை விட வகை 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவியுள்ளது என கண்டறியப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.

click me!