Cholesterol Control : கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் ஆபத்தான உணவுப் பழக்கங்கள்..!!

By Dinesh TG  |  First Published Oct 21, 2022, 11:10 PM IST

நம் உடலுக்கு தேவையான ஒன்று கொலஸ்ட்ரால். இதுயில்லாமல் நாம் உயிர்வாழ்வது மிகவும் கடினம். ஆனால் இந்த அளவுக்கு மீறினால் ஆபத்தாகிவிடும். அதனால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் முக்கியம்.
 


குறிப்பிட்டளவில் கொலஸ்ட்ரால் இருந்தால் மட்டுமே நமக்கு பாதுகாப்பு. ஒருவேளை கொலஸ்ட்ரால் அளவு எல்லையை மீறும்போது, பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றன. நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நீரிழிவு, ரத்த கொதிப்பு மட்டுமில்லாமல் கொலஸ்ட்ரால் அதிகரிப்பால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் உடலில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்பது குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.

பொறித்த உணவுகள் கூடாது

Tap to resize

Latest Videos

ஏற்கனவே கொலஸ்ட்ரால் அதிகமாக இருபப்வர்கள் எண்ணெய்யில் பொறித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவ்ம். அதில் கொழுப்பு அதிகமாக இருக்கும் என்பது முக்கிய காரணம். இதனால் உடலில் கலோரியின் அளவு அதிகரித்து திண்டாட்டமாகிவிடும். பொறித்த உணவுகளை சாப்பிட்டுவிட்ட எந்தவித பணி செய்யாமல் சும்மா இருப்பதாலும் பிரச்னை பெரிதாகும். இதனால் விரைவாக இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள் கூடாது

பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதும் ஆபத்தானது தான். பொட்டலங்களில் வைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ், முருக்கு உள்ளிட்ட நொறுக்குத் தீனி உடலில் கொலஸ்ட்ராஸ் அளவை அதிகப்படுத்தும். அவற்றில் சுத்தரிக்கப்பட்ட கார்ப்போஹைட்ரேட் இருப்பதே அதற்கு காரணம். இதனால் உடலில் அழற்சி உண்டாகி ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்டு விற்கப்படும் அல்லது சமைக்கப்படும் இறைச்சிகளை உட்கொள்வதனால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு கடுமையாக அதிகரிக்கும். தொடர்ச்சியான பதப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கம் நிச்சயம் உடலில் கொழுப்பை ஆபத்தான அளவுக்கு இழுத்துச் செல்லும். இதனால் எப்போதும் வீட்டில் சமைக்கப்படும் இறைச்சிகளை வாங்கி உண்ணுங்கள். நீங்கள் இறைச்சி வாங்கினால், அன்றே சமைத்து அன்றே சாப்பிட்டு விடுங்கள்.

தினமும் செல்ஃபி எடுத்துப் பாருங்கள்..!! அற்புதம் ஏற்படும் நம்புங்கள்..!!

ஆல்கஹால் பயன்பாடு

கொலஸ்ட்ராலை அளவாக கொண்டிருந்தாலும், உங்களுக்கு கொலஸ்ட்ரால் அளவுக்கு மீறி இருந்தாலும் நிச்சயம் ஆல்கஹால் பயன்பாடு ஆபத்தானது தான். இதனால் இருதய ஆரோக்கியம் விரைவாக பாதிக்கப்படும். மேலும் பல்வேறு உடல் உறுப்புகளும் பாதிக்கப்படக்கூடும். சர்க்கரை அளவு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் தோன்றும். ஆல்கஹால் பயன்பாட்டை கைவிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் மட்டுமல்ல, பல்வேறு அபாயம் ஏற்படுவதை உடனடியாக தடுக்கலாம்.

Weight Loss : உடல் எடையை குறைக்க உறுதுணை செய்யும் 5 குறைந்த கலோரி கொண்ட பழங்கள்..!!

ருசி கட்டுக்குள் இருக்க வேண்டும்

உணவு என்றவுடன் பலருடைய மனது அலைபாய தொடங்கும். அதற்காக நினைத்தவுடனே வேண்டியதை சாப்பிட வேண்டும் என்று நினைத்துவிடக்கூடாது. உடலுக்கு கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தும் உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அவற்றை அடிக்கடி அல்லது தினமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தால் நிச்சயம் உடல்நிலை பாதிக்கப்படும்.

click me!