இது ஏற்கனவே பலர் கேள்விப்பட்ட ஒன்று தான். எப்போதும் பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் சாப்பிடுவதற்கு தேவைப்படும் பொருட்களை சேமித்து வைப்பது நல்லது கிடையாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான மக்கள் தற்போது தங்களுடைய ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்களாக மாறி வருகின்றனர். தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உணவுப் பொருட்கள் குறித்த தகவல்களை சேகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்கேற்ப தங்களுடைய வாழ்க்கை முறையையும் அவர்கள் மாற்ற முயற்சித்து வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில் இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது.
\பொதுவாக பிளாஸ்டிக் பாத்திரங்களில் சாப்பிட தேவையான பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது என்று பலர் சொல்லி கேட்டிருப்போம். ஆனால் இது பொய் என்று சொல்லி, தங்களுக்கு பிடித்தமான போக்கில் இருப்பவர்களும் உண்டு. எனினும் பிளாஸ்டிக் பாத்திரத்தில் சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களை நாம் உண்ணும் போது நடக்கும் மாற்றங்கள் என்ன என்பதை விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
பெரும்பாலான வீடுகளில் நறுக்கிய காய்கறிகள், தேங்காய் மற்றும் சமைத்த உணவுகளில் எஞ்சியவற்றை பிளாஸ்டிக் கொள்கலன்களில் குளிர்சாதன பெட்டியில் அல்லது வெளியில் சேமித்து வைப்பது வழக்கம். ஆனால் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகளை வைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது கிடையாது.
நாம் வீட்டில் பயன்படுத்தும் பெரும்பாலான பிளாஸ்டிக் கொள்கலன்களில் 'பிஸ்பெனால் ஏ' என்ற கூறு காணப்படுகிறது. உணவின் மூலம் நம் உடலுக்குள் நுழையும் போது அது நச்சுத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது நம்மை பல வழிகளில் பாதிக்கலாம். அதேபோல், பிளாஸ்டிக் கொள்கலன்களில் உள்ள 'எண்டோகிரைன் சீர்குலைக்கும் இரசாயனங்கள்' உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இது நமது ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும்.
காபி அல்லது டீ குடித்த பிறகு சோர்வு ஏற்படுகிறதா..? அலட்சியம் வேண்டாம்..!!
எனவே, நீங்கள் தொடர்ந்து பிளாஸ்டிக் கொள்கலன்களில் உணவை வைத்திருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். முடிந்தவரை சமைத்த உணவை கண்ணாடி அல்லது துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்களில் சேமித்து வைப்பது நல்லது. குளிர்சாதன பெட்டியில் வைப்பது சிறந்தது. பொதுவாக பிளாஸ்டிக் பாத்திரங்களுக்கு எப்போதும் வெளிப்புறத்துடன் ரசாயனம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
சமைத்தவுடன் கூடிய சீக்கிரம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால், அதை ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு குளிரூட்டலாம். அதில் உள்ள கொள்கலன் வகையைக் கவனியுங்கள். பிறகு சாப்பிட நேரம் ஒதுக்கி, அந்த நேரத்திற்கு தேவையானதை மட்டும் சூடாக்கவும். எஞ்சியவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது உணவில் இருந்து அதிக ஊட்டச்சத்துக்களை இழக்கிறது மற்றும் நோய்க்கிருமிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை உருவாக்குகிறது.