Face Wash: சோப்பு போட்டு முகத்தைக் கழுவினால் ஆபத்து நிச்சயம்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!Washing your face

Published : Dec 12, 2022, 04:42 PM IST
Face Wash: சோப்பு போட்டு முகத்தைக் கழுவினால் ஆபத்து நிச்சயம்:  அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!Washing your face

சுருக்கம்

நாம் முகத்தை சோப்பு போட்டு கழுவுவதால், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

தினசரி குளிக்கும் போது மற்றும் ஃபேஸ் வாஷ் செய்யும் போது, பொதுவாக நாம் முகத்திற்கு சோப்பைப் பயன்படுத்துவோம். ஆனால், இப்படி நாம் முகத்தை சோப்பு போட்டு கழுவுவதால், நம் உடலுக்கு தீங்கு விளைவிக்க நேரிடும் எனும் அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

சோப்பில் பல விதமான வேதிப் பொருட்கள் இருப்பதே இதற்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது. சோப்புத் தயாரிப்பில் சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் இது உணர்த்துகிறது. சுத்தமான தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் சோப்பு, நம் சருமத்திற்கு நன்மையை மட்டுமே அளிக்கும். ஆனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக கண்ட கண்ட தரமற்ற எண்ணெய்கள் தான் சோப்புத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

Butter Coffee: நுரையீரல் பிரச்சனையா உங்களுக்கு? உடனடித் தீர்வுக்கு வெண்ணெய் காபி தான் பெஸ்ட்!

ஆபத்தான சோப்பு
 
தோலின் உடைய pH அளவை மாற்றக் கூடிய தன்மையை இந்த சோப்புகள் கொண்டுள்ளது. நமது சருமத்தின் மிகச் சிறந்த உடலியல் pH 5.5 ஆகும். இது நம்முடைய சருமத்தின் பாதுகாப்பு அமில கவசம் ஆகும். நாம் தினந்தோறும் பயன்படுத்தி வரும் சோப்புகளில் அல்கலைன் pH உள்ளது. இதன் pH அளவு 9 வரை கூட இருக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த உயர் pH அளவானதே, தோலின் உடைய பாக்டீரியா தாவரங்களை சீர்குலைத்து, தோலின் மேல் அடுக்கில் இருக்கும் நொதிகளின் செயல்பாட்டையும் மாற்றி விடுவதால், உலர்ந்த மற்றும் கடினமான தோலாக மாறி விடும். முகத்திற்கு சோப்பு போடுவதன் காரணமாக, தோலின் மேல் அடுக்கானது ஹைப்பர்-ஹைட்ரேட் ஆகி விடுகிறது. இது, தோலின் கட்டுமானத் தொகுதியை சேதப்படுத்தி விடுகிறது.

ஃபேஸ் வாஷ்க்கு சிறந்த தீர்வு

உடலில் இருக்கும் சருமத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, 5.5-க்கு பொருத்தமான pH மதிப்புடன் கூடிய திரவத்தை கொண்டு முகத்தைக் கழுவ பயன்படுத்தலாம். சோப்பு அழுக்கைப் போக்குவது மட்டுமின்றி, தோலில் உள்ள அத்தியாவசிய கொழுப்புத் தடையையும் எடுத்து விடும். ஆனால், ஃபேஸ் வாஷ், அழுக்குகளை மட்டும் எடுத்து விட்டு, ஆரோக்கியமான எண்ணெய்கள் மற்றும் சருமத்தின் pH அளவையும் பராமரிக்கிறது. ஆகவே, சோப்பைத் தவிர்த்து விட்டு, ஃபேஸ் வாஷ் கொண்டு உங்களுடைய முகத்தை கழுவுவது தான் மிகவும் சிறந்தது என பரிந்துரைக்கப்படுகிறது. தினந்தோறும் இரு முறை ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தைக் கழுவினால் அழுக்குகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி விடும்.

ஆகவே, இனியாவது ஆபத்தை விளைவிக்கும் சோப்பை முகத்திற்கு பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே, நம் சருமத்திற்கு நன்மையைத் தரும்

PREV
click me!

Recommended Stories

Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க
Heart Healthy Exercises : ஆயுசுக்கும் இதயம் ஆரோக்கியமாக இருக்க '5' பயிற்சிகள் போதும்! தினமும் செய்ங்க