மீதமான இட்லியில் கமகம வாசனையில் முட்டை கொத்து இட்லி! ருசியாக செய்வோம் வாங்க

By Dinesh TG  |  First Published Dec 11, 2022, 1:47 PM IST

வாருங்கள்!ருசியான முட்டை கொத்து இட்லியை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 


வழக்கமாக நம்மில் அதிகமானோர் இட்லி மீந்தால் உப்மா செய்து சாப்பிடுவோம்.அதுவும் சில நேரங்களில் காலி ஆகாமல் அப்படியே இருக்கும். இனி இட்லி மீந்தால் உப்மா செய்யாமல் முட்டை கொத்து இட்லியை ஒரு முறை செய்து பாருங்கள். இதனை செய்யும் பொழுதே வீடு முழுவதும் கமகம என்று வாசனை வரும். 

இதனை செய்து தட்டில் வைத்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சத்தம் இல்லாமலும் மிச்சமில்லாமலும் சாப்பிட்டு முடிப்பார்கள்.மீண்டும் வேண்டும் என்று மறுமுறை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். 

Latest Videos

undefined

வாருங்கள்!ருசியான முட்டை கொத்து இட்லியை எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள் : 

இட்லி - 8
முட்டை - 3
வெங்காயம் - 2 
தக்காளி - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன் 
கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன் 
கறிவேப்பிலை-1 கொத்து 
கொத்தமல்லி - கையளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - 3 தேவையான அளவு 

Fruits: பழங்களை சாப்பிடும் போது தப்பித் தவறிக் கூட இந்த தப்ப செய்யாதிங்க!

செய்முறை : 

இட்லியை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி பீட் செய்து கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, சோம்பு சேர்த்து வறுத்து பின் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். 

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அதன் பச்சை வாசனை சென்ற பிறகு, அதில் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். பின் கலவையில் தனியா தூள், மிளகாய் தூள்,மிளகுத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும். 

பின் அதில் பீட் செய்து வைத்துள்ள முட்டை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  கலவையில் முட்டை நன்றாக சேர்ந்த பின்னர், உதிர்த்து வைத்துள்ள இட்லியை சேர்த்து பிரட்டி எடுத்து , சிறிது உப்பு தூவி மிதமான தீயில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் வரை வைக்க வேண்டும். இறுதியாக மல்லித்தழையை சேர்த்து அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். அவ்ளோதான்! ருசியான முட்டை கொத்து இட்லி ரெடி!!!

சுட சுட பரிமாறி சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்டில் இருக்கும்,

click me!