குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்கள் கூட இதனை விரும்வி சாப்பிடும் வகையில் இதன் சுவை அலாதியாக இருக்கும். வாருங்கள்! சுவையான சாக்லேட் பாஸ்தாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எப்பொழுதும் செய்கின்ற காலை உணவுகளை செய்து கொடுத்து அலுத்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமாக புதுமையாக ஒரு ரெசிபி செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கூறுகின்றனரா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்.
இன்றைய குழந்தைகளுக்கு நூடுல்ஸ், பாஸ்தா போன்ற உணவுகளை மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர்.பாஸ்தாவை ஒரே மாதிரியான சமைக்காமல் இன்று கொஞ்சம் டிஃபரென்டா, சூப்பரா சாக்லேட் சேர்த்து இப்படி செய்து பாருங்கள். தட்டில் வைத்த அடுத்த நிமிடங்களில் காலி செய்து விட்டு மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
undefined
குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்கள் கூட இதனை விரும்வி சாப்பிடும் வகையில் இதன் சுவை அலாதியாக இருக்கும். வாருங்கள்! சுவையான சாக்லேட் பாஸ்தாவை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்தா - 1 கப்
கோகோ பவுடர் - 1/2 கப்
காய்ச்சிய கெட்டி பால் - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
சாக்லேட் சிரப் - 2ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ்- தேவையான அளவு
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் : சத்தான "வெஜிடேபிள் வடை" இப்படி செய்து தாங்க
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி, தீயினை சிம்மில் வைத்து பாலை காய்ச்ச வேண்டும். பாலில் சர்க்கரை சேர்த்து நன்றாக கரையும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
பால் கெட்டியாக மாறிய பிறகு, அதனை ஒரு கடாயில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது கடாயை அடுப்பில் வைத்து அதில் கோகோ பவுடரை சேர்த்து அதனை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கலவை கெட்டியாக மாறிய பிறகு, அதில் வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து கிளறி விட வேண்டும். சாக்லேட் கலவையில் பாஸ்தாவை வேக வைக்க வேண்டும்.
பின் கடாயில் சாக்லேட் சிரப் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும். பாஸ்தாவில் சாக்லேட் கலவை முழுவதும் சேர்ந்த பிறகு, அடுப்பினை
ஆஃப் செய்து விட்டு கடாயை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.
பின் இறுதியாக சாக்லேட் சிப்ஸ் தூவி சுட சுட பரிமாறினால் சுவையான குட்டிஸ்களுக்கு பிடித்த சாக்லேட் பாஸ்தா ரெடி!!! வேற லெவலில் இருக்கும் சுவையான சாக்லேட் பாஸ்தாவை நீங்களும் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.