நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவுகள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மூலிகை இலைகளை கொண்டு சூப்பரான ஒரு சூப் ரெசிபியான ஹெர்பல் சூப் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
பொதுவாக மழை மற்றும் குளிர் காலங்களில் நம்மில் பலரும் சளி,இருமல், தொண்டை கரகரப்பு,காய்ச்சல் போன்ற பிரச்னைகளை சந்திப்போம். மேலும் இந்த நோய் தொற்றுகள் மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையும் கொண்டது.
இந்த மாதிரி பிரச்சனைகளை தடுக்க மிக சிறந்த வழி என்றால், நாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் உணவுகளை எடுத்துக் கொண்டாலே இம்மாதிரியான சூழ்நிலையை சிறப்பாக கையாளலாம்.
undefined
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவுகள் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நாம் மூலிகை இலைகளை கொண்டு சூப்பரான ஒரு சூப் ரெசிபியான ஹெர்பல் சூப் எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
தூதுவளை இலைகள் - 10
துளசி இலைகள் - 10
கற்பூர வள்ளி இலை -5
புதினா - கையளவு
கறிவேப்பிலை-1 கொத்து
இஞ்சி - ஒரு ஸ்பூன்
மல்லித்தழை-கையளவு
பூண்டு - 5 பற்கள்
சின்ன வெங்காயம் - 10
எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் -தேவையான அளவு
உப்பு- தேவையான அளவு
மொருமொருப்பான சிக்கன் லாலி பாப்!- வாங்க சமைக்கலாம்!
செய்முறை:
முதலில் கற்பூர வள்ளி இலைகள், தூதுவளை இலைகள், துளசி , புதினா, மல்லித்தழை,கறிவேப்பிலை ஆகியவற்றை தண்ணீரில் ஒரு முறை அலசிக் கொள்ள வேண்டும். அடுத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்துக் கொண்டு, அதனை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று பூண்டினை தோல் உரித்து மிக பொடியாக அரிந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இஞ்சியை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை பழத்தை பிழிந்து ஜூஸ் செய்து கொள்ள வேண்டும். பின் மல்லித்தழையை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தூதுவளை இலைகள், துளசி இலைகள்,கற்பூர வள்ளி இலைகள் ,புதினா, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம்,துருவிய இஞ்சி, பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டு, பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழை ஆகியவற்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து, தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அனைத்தும் நன்றாக கொதிக்கும் போது சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து கடாயை எடுத்து விட்டு சூப்பை ஒரு பௌலில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது பௌலில் தேவையான அளவு மிளகுத்தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பருகினால் சூப்பராக இருக்கும்